• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நீட் தேர்வு, ஒளிப்பதிவு திருத்தச்சட்டம் குறித்து விவாதத்துக்கு தயாரா? சூர்யாவுக்கு பாஜக அழைப்பு

நீட் தேர்வு, ஒளிப்பதிவு திருத்தச்சட்டம் குறித்து விவாதத்துக்கு தயாரா? சூர்யாவுக்கு பாஜக அழைப்பு

சூர்யா

சூர்யா

பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 25 ரூபாய் வரி தமிழ்நாடு அரசுக்கும் 33 ரூபாய் வரி மத்திய அரசுக்கும் போகிறது என கரு.நாகராஜன் கூறியுள்ளார்.

  • Share this:
நீட் தேர்வு, ஒளிப்பதிவு திருத்தச்சட்டம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடிகர் சூர்யா விவாதத்துக்கு தயாரா என பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த சட்டம் வந்தாலும் அதற்குரிய எதிர்ப்பை நடிகர் சூர்யா தனது அறிக்கை வாயிலாக தெரிவித்து வருகிறார். நீட் தேர்வு கட்டாயம் ரத்து செய்யப்பட வேண்டும் என அறிக்கை வெளியிட்டார். தொடர்ந்து, வேளான் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதேபோல், சுற்றுச்சூழல் மதிப்பீட்டு சட்டத்திற்கு எதிராகவும் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெரும்பாலும் அவர் தெரிவித்த கருத்துக்கள் மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்கள் குறித்து இருப்பதால் பாஜகவினர் நடிகர் சூர்யாவை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

அந்தவகையில், தற்போது மத்திய அரசின் ஒளிபரப்புச் சட்ட வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சூர்யா, ''சட்டம் என்பது கருத்துச் சுதந்திரத்தைக் காப்பதற்காக.. குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல'' என்று தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இதனால் மீண்டும் சூர்யாவுக்கு எதிரான பாஜகவினர் எதிர்க்குரல் எழுந்துள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வு, ஒளிப்பதிவு திருத்தச்சட்டம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடிகர் சூர்யா விவாதத்துக்கு தயாரா என பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Also read: படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் சுய வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதுதொடர்பாக சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கரு.நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், நீட் தேர்வுக்கு தமிழ்நாடு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து, மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் நடிகர் சூர்யா அது தொடர்பாக விவாதத்துக்கு தயாரா? அதற்கு அவர் தயாராக இருக்க மாட்டார் என்று கூறினார்.

மேலும், பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 25 ரூபாய் வரி தமிழ்நாடு அரசுக்கும் 33 ரூபாய் வரி மத்திய அரசுக்கும் போகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 76 டாலர்கள் விற்கக்கூடிய சூழலில் தமிழ் நாட்டின் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 40 டாலர் விற்பதாக பொய் சொல்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: