• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டிஎன்பிஎஸ்சி பணிகளில் பெண்கள் ஆதிக்கமா? இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் முறை...

டிஎன்பிஎஸ்சி பணிகளில் பெண்கள் ஆதிக்கமா? இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் முறை...

Youtube Video

டிஎன்பிஎஸ்சியில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து, 40 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டதில் இருந்து, பல்வேறு வாதங்கள் எழுந்துள்ளன.

  • Share this:
    டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து, 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கிடைமட்ட சிறப்பு இட ஒதுக்கீடான (horizantal reservation) இந்த முறை பின்பற்றப்படுவது சரியானதாக இல்லை என துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.

    கடந்த இரண்டு ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி பணிகளில் நிரப்பப்பட்ட புள்ளவிவரங்களின் படி,

    2018 - 2019 குரூப் 1 தேர்வுகளில் மொத்தம் 85 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதில், 58 (68 சதவீதம்) பெண்களும், 27 (32 சதவீதம்) ஆண்களும் தேர்வாகியுள்ளனர்.

    2018 - 2019 குரூப் 2 தேர்வுகளில் மொத்தம் 1078 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதில், 655 (61 சதவீதம்) பெண்களும், 423 (39 சதவீதம்) ஆண்களும் தேர்வாகியுள்ளனர்.

    2018 - 2019 குரூப் 4 தேர்வுகளில் மொத்தம் 11943 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதில், 6028 (50.5 சதவீதம்) பெண்களும், 5915 (49.5 சதவீதம்) ஆண்களும் தேர்வாகியுள்ளனர்.

    இந்த புள்ளிவிவரங்கள் இந்த 3 முக்கியமான தேர்வுகளுக்கு தான் எடுக்கப்பட்டுள்ளது. வேறு சில தேர்வுகளில் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ளதையும் காண முடிகிறது.

    2019 - 2020 குரூப் 1 தேர்வுகளில் மொத்தம் 181 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதில், 114 (63 சதவீதம்) பெண்களும், 67 (37 சதவீதம்) ஆண்களும் தேர்வாகியுள்ளனர்.

    பெரும்பாலும், குரூப் 1 தேர்வுகளில் பெண்களின் சதவீதம் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

    2019 - 2020 குரூப் 2 தேர்வுகளில் மொத்தம் 1321 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதில், 767 (58 சதவீதம்) பெண்களும், 554 (42 சதவீதம்) ஆண்களும் தேர்வாகியுள்ளனர்.

    2019 - 2020 குரூப் 4 தேர்வுகளில் மொத்தம் 9310 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதில், 4951 (53 சதவீதம்) பெண்களும், 4359 (47 சதவீதம்) ஆண்களும் தேர்வாகியுள்ளனர்.

    இந்த 3 முக்கியமான தேர்வுகளிலும் பெண்களுக்காக 30 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், அதையும் தாண்டி எப்படி அதிக பெண்கள் தேர்வானார்கள் என்பதை பார்போம்..

    இட ஒதுக்கீடு முறை எப்படி பின்பறப்படுகிறது என்றால், 100 சதவீதம் இடங்கள் உள்ளது என்றால், அதில் 40 சதவீதம் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மீதமுள்ள 60 சதவீதம் என்பது ஆண்களுக்கானது அல்ல. அது பொதுவானது. அதில் பெண்களும் போட்டியிடுவார்கள்.

    இதில் தற்போது என்ன கோரிக்கை முன்வைக்கப்படுகிறது என்றால், 10 இடங்கள் தற்போது இருக்கிறது என்றால், 30 சதவீதமான 3 இடங்கள் இருக்கிறது. இதனை இப்படி பார்க்காமல், முதலில் தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் 10 பேரை கொண்டு வர வேண்டும். இந்த 10 பேரில், தரவரிசைப்படி 10 பேரும் பெண்களாகவே இருந்தாலும் பரவாயில்லை.

    ஆனால், இந்த 10 பேரில் குறைந்தபட்சம் 3 பெண்கள் இல்லாத பட்சத்தில் தரவரிசையில் பின்னால் இருப்பவர்களை முன்னால் கொண்டுவரலாம். ஆனால் முன்னதாகவே, இந்த மூன்று இடங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மீதமுள்ள 7 இடங்களை மட்டும் ஆண்களுக்கான இடங்களாக காண்பிக்க கூடாது என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இதற்கு ஒரு நீதிமன்ற உத்தரவும் கூட உதாரணமாக சொல்லப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: