ஆன்லைன் மூலம் இறைச்சிக் கடைகள் இயங்க அனுமதிக்கப்படுமா? தமிழக அரசுக்கு வியாபாரிகள் கோரிக்கை!

இறைச்சிக் கடை - மாதிரி படம்

நடமாடும்  மளிகை வியாபாரத்திற்கு தமிழக அரசு அனுமதித்தது போல் இறைச்சி கடைகளுக்கு ஆன்லைன் மூலம் அனுமதி அளிக்க வேண்டும்

 • Share this:
  ஆன்லைன் மூலம் இறைச்சி கடைகளுக்கும் அனுமதி அளிக்க கோரி தமிழக இறைச்சி கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

  தமிழகத்தில் தற்பொழுது ழுழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் இறைச்சி கடைகள் திறப்பதற்கான அனுமதி இல்லை. ஆனால் அசைவ உணவகங்கள் திறப்பதற்கான அனுமதி இருக்கும் நிலையில் உணவகங்களில் இறைச்சிகளுக்குகான தட்டுப்பாடு நிலவி வருகிறது.

  Also Read:   டியூஷன் படித்து வந்த 17 வயது மாணவருடன் மாயமான ஆசிரியை!

  இதனை தடுப்பதற்கும் இறைச்சி கடைக்காரர்களின் வாழ்வாதாரம் தடைபடாமல் இருப்பதற்கும், நடமாடும்  மளிகை வியாபாரத்திற்கு தமிழக அரசு அனுமதித்தது போல் இறைச்சி கடைகளுக்கு ஆன்லைன் மூலம் அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைத்தனர்.

  இறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர்


  அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் அலி கூறுகையில் தமிழக அரசு இறைச்சி கடைகளை திறப்பதற்கான அனுமதி தர வேண்டும் என்றும் ஆன்லைன் மூலமாக அல்லது வாடிக்கையாளரின் வீடுகளுக்கு நேரடியாக சேன்று சுகாதார விதிமுறைகளின் படி விற்பனை செய்வதற்கான அனுமதி அளிக்க வேண்டும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  வியாபாரிகள் அன்றன்றைக்கு சம்பாதித்ததை வைத்தே உணவு உண்ணும் நிலை இருப்பதனால் தற்பொழுது இறைச்சி கடைகள் மூடி இருப்பதால் தங்கள் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் உணவு கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும் அதனை தடுக்க இறைச்சி கடைகளை திறப்பதற்கான வழிமுறைகளை அரசு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
  Published by:Arun
  First published: