திமுக பொதுக்குழுவில் கலந்துகொண்ட ஆற்காடு வீராசாமி

நடப்பதற்கே மிகுந்த சிரமப்பட்டு மெதுவாக அரங்கத்திற்குள் வந்த ஆற்காடு வீரசாமிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது.

திமுக பொதுக்குழுவில் கலந்துகொண்ட ஆற்காடு வீராசாமி
ஆற்காடு வீரசாமி
  • Share this:
அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் கலந்துக்கொண்ட முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமி, உடல்நலக்குறைவால் பாதியிலேயே வெளியேறினார்.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமி வந்திருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக சமீப காலங்களில் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

ஒரு வருடத்திற்கு முன்னர் அவரது மகன் கலாநிதி வீராசாமி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது அறிவாலயத்திற்கு வந்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அதன் பின்னர் அறிவாலயம் வராத ஆற்காடு வீராசாமி திமுக பொதுக்குழுவில் பங்கேற்க இன்று காலை 9.30 மணிக்கு வந்தார்.


நடப்பதற்கே மிகுந்த சிரமப்பட்டு மெதுவாக அரங்கத்திற்குள் வந்த அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது. பொதுக்குழுவில் துரைமுருகன், டி .ஆர். பாலு, பொன்முடி, ராசா ஆகியோருக்கு புதிய பொறுப்புகள் அறிவிக்கப்பட்டன. அண்ணா அறிவாலயத்தில் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. அரங்கம் முழுக்க குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.இந்த  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆற்காடு வீராசாமி 11 மணி அளவில் அரங்கத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரோடு வந்தவர்களிடம் கேட்டபோது, உள்ளே ஏசி இருப்பதால் மூச்சு விடுவதற்கு சிரமமாக இருப்பதாக கூறினர். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர முடியாமலும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாலும் வீட்டிற்கு செல்வதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுக் குழுவில் இருந்து பாதியிலேயே ஆற்காடு வீராசாமி புறப்பட்டுச் சென்றார்.
First published: September 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading