தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தென்னிந்திய திருச்சபைகள் (CSI) பேராயர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. திமுக மற்றும் தோழமை கட்சிகள், அதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள், பாமக, பாஜக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உட்பட பல்வேறு கட்சிகள் தேர்தலில் களம் காண்கின்றன. இதற்காக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு தென்னிந்திய திருச்சபைகள் பேராயர்கள் (சி.எஸ்.ஐ) ஆதரவு தெரிவித்துள்ளனர். சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், இன்று (16.2.2022) காலை, தென்னிந்திய திருச்சபை பேராயர்கள் (சி.எஸ்.ஐ) முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ‘உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்தால் நல்ல காலம் பிறக்குது’... குடு குடுப்பை வாசித்து கடலூரில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
தென்னிந்திய திருச்சபைகள் செயலாளர் திரு.சி.பெர்னான்டஸ் ரெத்தினராஜா, சி.எஸ்.ஐ. மதுரை பேராயர் ஜோசப், சி.எஸ்.ஐ. கோயம்புத்தூர் பேராயர் தீமோத்தேயு, சி.எஸ்.ஐ. சென்னை பேராயர் ஜெ. ஜார்ஜ் ஸ்டீபன், சி.எஸ்.ஐ. திருநெல்வேலி பேராயர் பர்ணபாஸ், சி.எஸ்.ஐ. வேலூர் பேராயர் சர்மா நித்தியானந்தா, அருட்திரு கிறிஸ்டோபர். சி.எஸ்.ஐ. சென்னை பேராய செயலர் அருட்திரு அறிவர் மேனியல் டைட்டஸ். சி.எஸ்.ஐ. பிசப் சேப்ளின் அருட்திரு ஏனஸ். சென்னை பேராயர் அருட்திரு இம்மானுவேல் தேவகடாட்சம்.சென்னை பேராயர் அருட்திரு பால் தயாநிதி, சென்னை திரு. எபி. எர்னஸ்ட், சென்னை திரு. பார்த்தீபன் செனாட், சி.என்.ஐ. பொதுச்செயலர் திரு. தயாநிதி, சி.என்.ஐ. பொருளாளர் திரு. ஹேமில்டன் வெல்சர் ஆகியோர் மற்றும் திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா ஆகியோர் உடனிருந்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.