தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் முறைப்படி அர்ச்சனை.. பக்தர்கள் உற்சாக வரவேற்பு

தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் முறைப்படி அர்ச்சனை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் முறைப்படி அர்ச்சனை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

  • Share this:
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழ் முறைப்படி அர்ச்சனை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.  அந்த அறிவிப்பின் படி முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 47 ஆலயங்களில் இன்று "அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதேபோல் தஞ்சை பெரிய கோவிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெருவுடையாருக்கு தமிழ் முறைப்படி இன்று அர்ச்சனைகள் நடைபெற்றது. இதை பக்தர்கள் உற்சாகத்துடன் வரவேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவிலில் தமிழ் முறைப்படி தான் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என கடந்த காலங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.

Also read: 'அன்னை தமிழில் அர்ச்சனை' இன்று முதல் கோயில்களில் தமிழில் அர்ச்சனை

மேலும் கருவறையிலும் தமிழ் முறைப்படி மந்திரங்கள் முழங்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு சமூக அமைப்புகளும் போராடி வந்த நிலையில், இன்று பெரிய கோவிலில் உள்ள பெருவுடையாருக்கு தமிழ் முறைப்படி அர்ச்சனை செய்யப்பட்டதை வரவேற்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழ் முறைப்படி அர்ச்சனையே விரைவாக விரைவுபடுத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Published by:Esakki Raja
First published: