மணலூரில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடங்கிய அகழாய்வுப் பணிகள் - மனிதர்களின் வாழ்விடமாக இருக்க வாய்ப்பு

பணிகள் அனைத்து தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் மேற்பார்வையில் நடந்து வருகின்றன.

மணலூரில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடங்கிய அகழாய்வுப் பணிகள் - மனிதர்களின் வாழ்விடமாக இருக்க வாய்ப்பு
அகழாய்வு பணிகள் தொடக்கம்
  • Share this:
சிவகங்கை மாவட்டம் மணலூரில் கடுமையான வெயிலில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது மனிதர்கள் வாழ்விடமாக இருக்க வாய்ப்பு என்று தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மணலூரில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடங்கி நடைபெறறு வருகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி கீழடி, அகரம், கொந்தகை, மணலூரில் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

கீழடி உள்ளிட்ட மற்ற இடங்களில் அகழாய்வு பணிகள் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கிவிட்ட நிலையில், மணலூரில் இன்று காலை அகழாய்வு பணிகளை தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தொடங்கி வைத்தார். கடுமையான வெயில் அடித்து வரும் நிலையில், பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அகழாய்வுக்கான குழிகள் வெட்டும் பணிகள் இன்று நடந்து வருகின்றன.


இது குறித்து தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம் கூறுகையில், கீழடியில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்கள், தொழிற்சாலை இருந்த இடமாகவும், கொந்தகை அகழ்வாய்வு என்பது முதுமக்கள் தாழிகள் இருந்த இடமாகவும் தெரியப்பட்டன.அதன் தொடர்ச்சி அகரம் மற்றும் மணலூரில் மனிதர் வாழ்விடமாக கருதி பணிகளை தொடங்கப்பட்டு உள்ளது. இவைகள் அனைத்தும் கீழடியை ஒட்டி வருவதால் கீழடி தொல்லிய மேடுகள் என கருத்தபட்டு பணிகள் நடைபெற்ற வருகின்றன.சுமார் இரண்டு ஏக்கரில் பணிகள் நடந்து வருகின்றன. 10 குழிகள் தோண்ட முடிவு செய்யபட்டு பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார். மேலும் செப்டம்பர் கடைசி வரை பணிகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கபட்டு உள்ளது.இதில் ஊழியர்கள் அனைவருக்கும் மாஸ்க் அணிந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பணிகள் அனைத்து தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் மேற்பார்வையில் நடந்து வருகின்றன.

Also see...


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading