ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கேபிள் டிவி சேவையில் பாதிப்பா? உதவி எண்களை அறிவித்தது தமிழக அரசு!

கேபிள் டிவி சேவையில் பாதிப்பா? உதவி எண்களை அறிவித்தது தமிழக அரசு!

அரசு கேபிள் டிவி

அரசு கேபிள் டிவி

தனியார் நிறுவனத்தின் மென்பொருள் சேவைகளில் திடீரென தடைபட்டதால் பல பகுதிகளில் உள்ள செட்டாப் பாக்ஸ்களில் தடங்கல் ஏற்பட்டதாக அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்திருந்தது. இது குறித்து இன்று உதவி எண்களை வெளியிட்டுள்ளது செய்தி மக்கள் தொடர்பு துறை.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அரசு கேபிள் டிவி சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்ததுள்ளது.

  தமிழகம் முழுவதும்  பல்வேறு இடங்களில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு மூன்று நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. திருவள்ளூர் உள்ளிட்ட பல இடங்களில்  அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு அலுவலகங்களை முற்றுகையிட்டு கேபிள் ஆபரேட்டர் சங்கத்தினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இந்நிலையில் இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்பு துறை  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தால் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

  கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென் பொருளை அத்துமீறி இணைய வழியில் நுழைந்து செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  இந்நிலையில் தகவல் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப குழுவின் உதவியுடன் பாதிக்கும் மேற்பட்ட செட்டாப் பாக்ஸ்கள் தற்போது சரி செய்யப்பட்டுள்ளன. மேலும், கேபிள் ஆபரேட்டர்கள் நேரடியாக செட்டாப் பாக்ஸ்களில் சில மாற்றங்களை செய்து அதை இயக்கும் தற்காலிக தீர்வு குறித்தும் விளக்கப்பட்டு. அம்முறையிலும் இச் சிக்கலுக்குத் தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது.

  Also Read : செட்டாப் பாக்ஸ்கள் சேவை பாதிப்பு: அரசு கேபிள் டிவி விளக்கம்

  தற்போது, மென்பொருள்களை வழங்கிய முதன்மை நிறுவனத்துடன் அதை நேரடியாக பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இந்த தொழில்நுட்ப பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு சேவைகளை வழங்க அரசு கேபிள் டிவி நிறுவனம் முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது.

  இதுவரையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய கேபிள் ஆபரேட்டர்கள் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தற்காலிக பிரச்சனையை சீரமைக்கும் கேட்டுக்கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்க வேண்டுமென பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

  கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தொழில் நுட்ப உதவிக்கு கிழ் கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும் கேட்டு கொள்கிறோம் என தெரிவித்து அதன் உதவி எண்களையும் அறிவித்துள்ளது.

  அதன் விவரம் பின்வருமாறு:

  காஞ்சிபுரம், ராமநாதபுரம், தேனி. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு துணை மேலாளரின் 9498017289  என்ற எண்ணையும்,.

  கோயம்பத்தூர், திண்டுக்கல், ஈரோடு. கரூர். மதுரை. நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு துணை மேலாளரின் 9498017212 என்ற எண்ணையும்,.

  தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு துணை மேலாளரின் 9498002607 என்ற எண்ணையும்,.

  அரியலூர், கடலூர், பெரம்பலூர், புதுகோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு துணை மேலாளரின் 9498017287 என்ற எண்ணையும்,.

  மேலும் சென்னைக்கு 9498017283 என்ற  துணை மேலாளரின் 9498017287 எண்ணையும் வழங்கியுள்ளது செய்தி மக்கள் தொடர்பு துறை.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Arasu Cable, Cable Tv