ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

செட்டாப் பாக்ஸ்கள் சேவை பாதிப்பு: அரசு கேபிள் டிவி விளக்கம்

செட்டாப் பாக்ஸ்கள் சேவை பாதிப்பு: அரசு கேபிள் டிவி விளக்கம்

அரசு கேபிள் டிவி

அரசு கேபிள் டிவி

பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய தொழில்நுட்பக் குழு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அதிகபட்சம் இன்னும் 24 மணி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் முழுமையாக சரி செய்யப்படும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தனியார் நிறுவனத்தின் மென்பொருள் சேவைகளில் திடீரென தடைபட்டதால் பல பகுதிகளில் உள்ள செட்டாப் பாக்ஸ்களில் தடங்கல் ஏற்பட்டதாக அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

  நேற்று முதல் (19-11-2022) தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மென்பொருள் சேவைகள் வழங்கி வந்த தனியார் நிறுவனத்தின் மென்பொருள் சேவைகளில் திடீரென தடைபட்டதால் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவைகள் பல பகுதிகளில் உள்ள செட்டாப் பாக்ஸ்களில் தடங்கல் ஏற்பட்டது.

  பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய தொழில்நுட்பக் குழு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அதிகபட்சம் இன்னும் 24 மணி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் முழுமையாக சரி செய்யப்படும்.

  இதையும் வாசிக்க: பிற்போக்கு பயங்கரவாதக் கருத்தைப் பரப்பும் முயற்சியை தடுத்து நிறுத்தவும் - முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை

  அரசு கேபிள் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேபிள் ஆபரேட்டர்கள் பொதுமக்கள் வாடிக்கையாளர்கள் அனைவரையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

  மேலும், அந்த தனியார் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் கேபிள் டிவி நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்று செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Arasu Cable