Home /News /tamil-nadu /

தலைமை எடுக்கும் நடவடிக்கையை ஏற்கத் தயார்! மு.க.ஸ்டாலினைப் புகழந்த பா.ஜ.க தலைவர்

தலைமை எடுக்கும் நடவடிக்கையை ஏற்கத் தயார்! மு.க.ஸ்டாலினைப் புகழந்த பா.ஜ.க தலைவர்

பா.ஜ.க. துணை தலைவராக இருந்து கொண்டு தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும் என்று எப்படி சொல்வேன். நான் பேசியதை தவறாக எடுத்து கொள்ளப்பட்டது - அரசகுமார்

பா.ஜ.க. துணை தலைவராக இருந்து கொண்டு தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும் என்று எப்படி சொல்வேன். நான் பேசியதை தவறாக எடுத்து கொள்ளப்பட்டது - அரசகுமார்

பா.ஜ.க. துணை தலைவராக இருந்து கொண்டு தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும் என்று எப்படி சொல்வேன். நான் பேசியதை தவறாக எடுத்து கொள்ளப்பட்டது - அரசகுமார்

  • News18
  • 3 minute read
  • Last Updated :
மு.க.ஸ்டாலினை நான் சாதரணமாகத்தான் புகழ்ந்து பேசினேன். இதுதொடர்பாக பா.ஜ.க எந்த நடவடிக்கை எடுத்தாலும் ஏற்கத் தயார் என்று அரசகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநில துணைத் தலைவர் அரசகுமார், ‘புதுக்கோட்டையில் நடந்த பெரியண்ணன் அரசு திருமண விழாவில் கலந்துக் கொண்டேன். திருமணத்தை தி.மு.க தலைவர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். திருமண விழாவில் என்னை பேச அழைத்தனர். நான் யதார்த்தமாகப் பேசினேன். எதையும் திட்டமிட்டு பேசவில்லை. ஜனநாயக ரீதியில் தி.மு.க தலைவர் முதலமைச்சராக வேண்டும் என்று விரும்புகிறார். ஜனநாயக ரீதியில் முதலமைச்சர் ஆக வாழ்த்துக்கள் என்று தான் சொன்னேன். அடுத்து அவர் தான் முதலமைச்சர் என்று சொல்லவில்லை.
இது என் தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தினேன். இது எதுவும் பா.ஜ.க. கட்சியின் குரலாகவோ வார்த்தைகளாகவோ வெளியிடவில்லை. மு.க.ஸ்டாலின் எங்கு பார்த்தாலும் நலம் விசாரிப்பார்.

20 ஆண்டுகளாக அரசியலில் பயணிக்கிறோன். நாகரீகமான மரபின் அடிப்படையில் திருமண வீட்டில் காலங்களில் காத்திருங்கள் காரியங்கள் நடக்கும் என்று சொன்னதை சிலர் அடுத்து ஸ்டாலின் முதல்வர் என்றும் தி.மு.கவிற்கு ஆதரவாக பேசியதாகவும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். நான் சாதாரணமாக தான் சொன்னேன். பா.ஜ.க.விற்கும் தி.மு.கவிற்கும் கொள்கை ரீதியான மிகப்பெரிய மாறுப்பட்ட கருத்து, சிந்தனை உண்டு. பா.ஜ.க.வை ஆட்சி அமர்த்த வேண்டும் என்பதற்காக தான் உழைத்து கொண்டு இருக்கிறோம்.

கட்சியின் நிர்வாகியாக இருந்து கொண்டு வேறு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொல்லவில்லை. மு.க.ஸ்டாலின் ஜனநாயக ரீதியாக ஆட்சி அமைக்க காத்திருக்கிறார். காலம் வரும்போது காரியம் நடக்கும் என்று தான் சொன்னேன்.

12 ஆண்டுகளுக்கு முன்னாள் ஒருவிழாவில் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து ஆழகாக இருப்பதாக சொன்னேன். இன்னும் அழகு குறையாமல் இருக்கிறீர்கள். நான் ரசித்த தலைவர்களிலேயே அழகை பார்த்து ரசித்தது எம்.ஜி.ஆருக்கு பின் உங்களை என்று சொன்னேன். இது என் தனிப்பட்ட கருத்து. மு.க.ஸ்டாலினைப் பற்றி சொல்ல வேண்டும் என்று மனதில் தோன்றியதால் சொன்னேன்.

ஜனநாயக ரீதியாக வெற்றி பெற வேண்டும். ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று எண்ணுகிறார். திமுகவும் விரும்புகிறது. காலம் வரும் காத்திருங்கள். காரியம் நடக்கும் என்று யத்தார்த்தமாக சொன்னேன்.

ஆட்சி மாற்றம் என்ற பிண்ணனி என்ற அடிப்படையில் எதுவும் சொல்லவில்லை. ஒரு திருமண வீட்டின் மேடையில் அந்த தலைவர் இருந்தால் பேசினேன். இது எதிராகவோ கூட்டணி கட்சிக்கு பிரச்சனையாகவோ எதிர்ப்பார்க்கவில்லை. சிந்திக்கவும் இல்லை. அந்த மாதிரி எண்ணத்தில் பேசவில்லை. என்னுடைய பணிகளில் சேகருக்கு வருத்தம் இருக்குமோ என்று தெரியவில்லை.

இந்து தெய்வங்களுக்கு எதிராக தி.மு.க பேசி வருவதாக கருத்து உள்ளது. ஒரு காலத்தில் தி.மு.கவில் இருந்தவன். அந்த அடிப்படையில் எனக்கு தெரிந்த தலைவரை சாதாரணமாக சொன்ன வார்த்தைகள். இதில் எந்தவித அரசியல் பிண்ணனியும் இல்லை.

பா.ஜ.க. துணை தலைவராக இருந்து கொண்டு தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும் என்று எப்படி சொல்வேன். நான் பேசியதை தவறாக எடுத்து கொள்ளப்பட்டது. நான் சொன்ன வீதம் வேறு. புரிதல் வேறு வீதமாக இருக்கிறது. புரிதல் வேறு வீதமாக இருந்தால் நான் பொறுப்பில்லை.

தமிழக பா.ஜ.க.விற்கு இன்னும் 10,15 தினங்களில் தலைவர் தேர்ந்து எடுக்கப்படுவார் என்று கட்சியின் தேசிய செயல் தலைவர், மேலிட பொறுப்பாளர் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

நான் நேசிக்கும் தலைவர் பிரதமர் மோடி. திமுகவில் இலக்கிய அணி செயலாளராக இருந்தேன். எங்கள் கிராமத்தில் பஞ்சாயத்து போர்டு தலைவராகவும் திமுக தலைவர் கருணானிதியுடன் நெருக்கமாக இருந்தேன். ஜெயலலிதாவையும் சந்தித்து பேசக்கூடிய வகையில் நெருக்கமாக இருந்தேன். இது என்னுடைய அரசியலின் பரிமாண வளர்ச்சியாக தான் எடுத்து கொள்கிறேன்.

தலைவராக மோடியை ஏற்றுக் கொண்டு பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கும் ஆட்சியை பிடிக்கவும் உழைக்கும் தலைவர்களில் நானும் ஒருவனாக உள்ளேன். திமுகவில் இருந்தேன் என்று தான் கூறினேன். திமுக வீட்டு திருமண விழாவில் ஒரு வாழ்த்து சொன்னதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. நான் நினைத்தால் மு.க.ஸ்டாலின் முதல்வராகிவிட முடியுமா? பா.ஜ.க தலைமை எந்த முடிவு எடுத்தாலும் ஏற்க தயாராக இருக்கிறேன். அ.தி.மு.க ஆட்சி திருப்திக்கரமாக உள்ளது. அதில் அதிருப்தி எதுவும் கிடையாது.

ஒரு கட்சித் தலைவரை சாதாரணமாக வாழ்த்தி பேசியது மரபான ஒன்று. இதை அரசியலாக்கி சமூகவலைதளங்களில் தவறான கருத்துகளை பரப்பி வருவது வருத்தமான விசயம். எது வந்தாலும் எதிர் கொள்ள தயாராக இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

Also see:


 
Published by:Karthick S
First published:

அடுத்த செய்தி