சுபஸ்ரீ பலிக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் மனு!

சுபஸ்ரீ மறைவுக்கு காரணமானவர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அறப்போர் இயக்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

News18 Tamil
Updated: September 15, 2019, 11:02 PM IST
சுபஸ்ரீ பலிக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் மனு!
சுபஸ்ரீ மறைவுக்கு அறப்போர் இயக்கம் அஞ்சலி.
News18 Tamil
Updated: September 15, 2019, 11:02 PM IST
பேனர் விழுந்ததால் உயிரிழந்த சுபஸ்ரீ-க்கு அறப்போர் இயக்கம் அஞ்சலி செலுத்தி, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

சென்னை பள்ளிக்கரணையில் கடந்த 12-ம் தேதி மாலை திருமண வரவேற்பு பேனர், சாலையில் சென்ற இளம்பெண் சுபஸ்ரீ மீது விழுந்ததில், நிலை தடுமாறிய பெண் கீழே விழுந்தார். அப்போது, தண்ணீர் லாரி எதிர்பாராத விதமாக அவர் மீது ஏறியது.

படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விதிமுறைகளை மீறி ஜெயகோபால் பேனர் வைத்ததே மரணத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.


சுபஸ்ரீ யின் மறைவிற்கு காரணமான குற்றவாளிகள் மற்றும் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி அறப்போர் இயக்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட இடங்களில் பேனர் வைத்ததால் உயிரிழந்த சுபஸ்ரீ மற்றும் ரகுவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அறப்போர் இயக்கத்தின் சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அனைவரும் பேனர் கலாச்சாரத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து சுபஸ்ரீ மறைவுக்கு காரணமானவர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அறப்போர் இயக்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Loading...

First published: September 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...