Home /News /tamil-nadu /

ஏரியை ஆய்வு செய்த அறப்போர் இயக்கத்தினர் கைது!

ஏரியை ஆய்வு செய்த அறப்போர் இயக்கத்தினர் கைது!

கைது செய்யப்பட்ட அறப்போர் இயக்கத்தினர்

கைது செய்யப்பட்ட அறப்போர் இயக்கத்தினர்

தொடர்ச்சியாக அறப்போர் இயக்கம் நடத்திய விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சூழலியல் சார்ந்த பணிகளை அரசு முடக்கி வருவதாக இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் குற்றம் சாட்டி வந்தார்.

  • News18
  • Last Updated :
    சென்னை தரமணி அருகே உள்ள கல்லுக் குட்டை ஏரியை இன்று காலை ஆய்வு செய்த அறப்போர் இயக்க செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அறப்போர் இயக்கம் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகள், மாசுபாடுகள் குறித்து பதிவு செய்தும், ஊடகங்களிடம் தெரிவித்தும் வருகின்றன.

    குறிப்பாக, சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதற்கு நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, நீர் மேலாண்மையில் அரசின் மெத்தனம் ஆகியவையே உண்மையான காரணம் என்றும் சமூக ஊடகங்கள் வழியாகவும் ஆங்காங்கே பொதுக் கூட்டங்கள் நடத்தியும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த ஜூன் 30 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தொடர்பாக கேள்வி ”சென்னை கேளு என் தண்ணீர் எங்கே கேளு” என்கிற ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பாடகி சின்மயி, சூழலியல் செயல்பாட்டாளர்கள் பியூஸ் மனுஷ், நித்தியானந்த் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்று தண்ணீர் பஞ்சம் அதற்கான காரணங்கள் குறித்து பொதுமக்களுடன் உரையாடினர்.

    இந்தப் போராட்டத்திற்கு அரசு அனுமதி வழங்காத நிலையில் உயர் நீதிமன்றம் சென்று இதற்கான அனுமதியை பெற்று அறப்போர் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

    அதற்குப் பின்னர் தொடர்ச்சியாக அறப்போர் இயக்கம் நடத்திய விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சூழலியல் சார்ந்த பணிகளை அரசு முடக்கி வருவதாக அப்போது இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் குற்றம் சாட்டி வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில், அறப்போர் இயக்க நீர்நிலை குழு ஒருங்கிணைப்பாளர் ஹாரிஸ் சுல்தான் தலைமையில் பத்து செயல்பாட்டாளர்கள் தரமணி அருகே உள்ள கல்லு குட்டை ஏரியை பார்வையிட்டு அதில் கலக்கும் கழிவுநீர் பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்த போது போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர்.

    பின்னர் தரமணி லிங்க் சாலையில் உள்ள ஹேமா மஹாலில் அடைத்து வைத்துள்ளனர்.

    Published by:Sankar
    First published:

    Tags: Arapor iyakkam

    அடுத்த செய்தி