Home /News /tamil-nadu /

ஆரணி மக்களவைத் தொகுதி

ஆரணி மக்களவைத் தொகுதி

ஆரணி

ஆரணி

2014-ம் நடைபெற்ற கடந்த மக்களவைத் தேர்தலில் 80% மக்கள் தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் செலுத்தியுள்ளனர்.

  • News18
  • Last Updated :
காஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக பட்டுப்புடவைகளுக்கும் பொன்னி அரிசிக்கும் பெயர் பெற்ற ஆரணி மக்களவைத் தொகுதி கடந்த 2008-ம் ஆண்டில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்டது.

அதற்கு முன்னதாக இருந்து வந்த வந்தவாசி மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு, ஆரணி தொகுதி உருவாக்கப்பட்டது. 2009-ம் ஆண்டில் நடைபெற்ற 15-வது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம். கிருஷ்ணசாமி 3,96,728 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆரணி மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் வெ. ஏழுமலை 5,02,721 வாக்குகள் பெற்று ஆரணி தொகுதியையும் அ.தி.மு.க வசம் கொண்டு வந்தார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் ஆர்.சிவானந்தம் 2,58,877 வாக்குகளை பெற்றுத் தோல்வியைச் சந்தித்தார். பா.ம.க சார்பில் போட்டியிட்ட ஏ.கே. மூர்த்தி 2,53,332 வாக்குகளைப் பிரித்து தி.மு.க-வின் வெற்றிக்குப் பெரிய முட்டுக்கட்டையாகத் திகழ்ந்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 27,717 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். ஆரணி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டு, அங்கு 2009-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் 76.62% மக்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

2014-ம் நடைபெற்ற கடந்த மக்களவைத் தேர்தலில் 80% மக்கள் தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் செலுத்தியுள்ளனர். வரும் மக்களவைத் தேர்தலிலும் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Rahini M
First published:

Tags: Arani S22p12, Elections 2019, Lok Sabha Election 2019, North Central Tamil Nadu Lok Sabha Elections 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019

அடுத்த செய்தி