மாணவர்களுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி டீச்சர் கைது!

Arani Govt #SchoolTeacher Arrested Under #POCSO Act Law | அரசு பள்ளி மாணவர்களை ஆசிரியையே பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி டீச்சர் கைது!
போக்சோ சட்டத்தின்கீழ் ஆசிரியை கைது.
  • News18
  • Last Updated: March 21, 2019, 7:58 PM IST
  • Share this:
ஆரணியில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியை, போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த உமேஷ் குமார் - நித்யா ஆகிய இருவருக்கும் சுமார் 14 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது. அரசு பள்ளியில் ஆசிரியர்களான இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, உமேஷ் குமார் தன்னுடைய மனைவி நித்யா, ஆரணி அடுத்த பையூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் ஒரு சில மாணவர்களுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுப்பதாக பரபரப்பு புகாரை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளார்.


இது தொடர்பாக குழந்தை நல அலுவலரிடம் புகாரை கொடுத்து விசாரணை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அருகில் உள்ள மாணவர்களை டியூசனுக்கு வரவழைத்து நிர்வாணமாக நடனமாடுவதுடன், மாணவர்களுடன் செல்பியும் எடுத்தும் கொண்டது தெரியவந்தது.

பள்ளி மாணவர்களிடம் நடத்திய விசாரணையை வீடியோவில் பதிவு செய்த குழந்தை நல வாரியம், ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியை நித்யா மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளிக்கப்பட்டது.

அதன்பேரில் ஆசிரியை நித்யாவை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி ஆசிரியை நித்யாவை, மாவட்ட கல்வி அலுவலர் பணியிட நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது குறித்து வழக்கறிஞர் பாரதி நம்மிடம் பேசுகையில், “ஆசிரியை நித்யா பல பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். பள்ளி மாணவர்களை பயிற்சி வகுப்புகள் என்று வீட்டுக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருப்பது, அவர்களுடன் சேர்ந்து நிர்வாணமாக புகைப்படங்கள் எடுப்பதும், வீடியோக்களை எடுப்பதும் வழக்கமாக வைத்திருக்கிறார்” என்று கூறினார்.

மேலும், “இவர் மீது கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உமேஷ் குமார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். நித்யாவின் தந்தை ஆரணியில் அதிமுக இளைஞர் அணியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் புகாரை காவல்துறையினர் ஏற்கவில்லை. தற்போது குழந்தைகள் நல அமைப்பு இந்த புகாரை கையிலெடுக்க ஆசிரியை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்” என வழக்கறிஞர் பாரதி தெரிவித்தார்.

அரசு பள்ளி மாணவர்களை ஆசிரியையே பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

அ.ம.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் தி.மு.க-வில் இணைந்தார்!

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை... 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை...!

Also Watch...First published: March 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading