101-வது பிறந்த நாளை கொண்டாடிய தாத்தா - குடும்பத்தினர் 150 பேர் கூடி கொண்டாடிய திருவிழா

Youtube Video

தோட்டத்தில் விளைவிக்கப்படும் இயற்கையான காய்கறிகளைக் பயன்படுத்துவது கடைகளில் விற்கப்படும் தின்பண்டங்களை பயன்படுத்துவதில்லை என்றார் தாத்தா விஸ்வநாதன்.

 • Share this:
  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன், அவரது 101-வது பிறந்த நாளை 150 பேருடன் உற்சாகமாக கொண்டாடினார்

  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 101 வயதுடைய தாத்தா விஸ்வநாதன். இவர் தனது 101-வது பிறந்தநாளை தனது மூன்று மகன்கள் கருணாநிதி, காளிதாஸ்,சுப்பிரமணியன் மற்றும் மகள்கள் ஈஸ்வரி, சுகுமாரி மற்றும் 15 பேத்திகள் 16 பேரன்கள் 32 கொள்ளுப் பேரன் பேத்திகளுடன் தனது மனைவி லட்சுமியுடன் இணைந்து மாலை மாற்றி கேக் வெட்டி கொண்டாடினார்.

  இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் ராமநாதபுரம் காரைக்குடி உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்திருந்த உறவினர்கள் பேரன்கள் பேத்திகள் கொள்ளுபேரன் பேத்திகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பிறந்தநாள் வாழ்த்து பாட்டு பாடி வாழ்த்துக்கள் கூறி 101 வயது தாத்தா விஸ்வநாதனிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர். மேலும் பேத்திகள் தாத்தாவுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

  பிறந்தநாள் விழா தொடர்பாக பேத்தி நாகதேவி கூறும்போது, சென்ற ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய நேரம் என்பதால் நூறாவது பிறந்த நாள் விழா உறவினர்களுக்கு அழைப்பு கொடுக்காமல் விமர்சியாக கொண்டாடப்படவில்லை. இந்த ஆண்டு 101-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு பகுதியில் உள்ள உறவினர்களை அழைத்து பிறந்தநாள் விழா கொண்டாடியது மகிழ்ச்சியாய் இருக்கிறது. தாத்தா இதுவரை மருத்துவமனைக்கு சென்றதே இல்லை என்றும் அடுத்த ஆண்டு இதைவிட பெரியதாக 5000 பேருக்கு அன்னதானம் வழங்கி சிறப்பிக்க இருப்பதாக தெரிவித்தார்..

  101-வது பிறந்தநாள் கொண்டாடிய தாத்தா விஸ்வநாதன் கூறும்போது, தோட்டத்தில் விளைவிக்கப்படும் இயற்கையான காய்கறிகளைக் பயன்படுத்துவது கடைகளில் விற்கப்படும் தின்பண்டங்களை பயன்படுத்துவதில்லை. ஒவ்வொருவரும் நேர்மையாக இருந்தால் நோய் தொற்று ஏற்படாமலும் ஒருவருக்கு உதவி செய்யவில்லை என்றாலும் கெடுதல் செய்யாமல் இருந்தாலே நீண்ட ஆயுளோடு வாழலாம் என்றும் தெரிவித்தார்.
  Published by:Vijay R
  First published: