ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Storm Mandous : புயல் முன்னெச்சரிக்கை: சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

Storm Mandous : புயல் முன்னெச்சரிக்கை: சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

தேசிய மீட்பு படை

தேசிய மீட்பு படை

Storm Mandous : சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் 25 பேர் கொண்ட 6 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கக்கடலில் புதிய புயல் உருவாக வாய்ப்பு உள்ளதால், அரக்கோணம் முகாமில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விரைகின்றனர்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம், வட தமிழகத்தை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளதால் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை 04வது படை பிரிவில் இருந்து 6 குழுக்கள்

1.நாகப்பட்டினம்

2.தஞ்சாவூர்

3.திருவாரூர்

4.கடலூர்

5.மயிலாடுதுறை

6.சென்னை

ஆகிய மாவட்டத்திற்கு 25 பேர் கொண்ட 6 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை கொள்ள தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டதின் பேரில் படை பிரிவின் கமாண்டன்ட் அருண் உத்தரவின் பேரில் விரைகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Weather News in Tamil