திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும் பண்ருட்டி தொகுதி வேட்பாளருமான வேல்முருகன் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அரக்கோணம் சோமனூர் இரட்டை படுகொலையை செய்தவர்கள் மன்னிக்க முடியாதவர்கள் மனித குலத்திற்கு எதிரானவர்கள் என கடுமையாக விமர்சித்தார்.
அதே வேளையில் இந்தக் கொலைக்கு பின்னால் தற்போது வரை கைது செய்யப்பட்டவர்கள் அதிமுக நிர்வாகிகளின் மகன்கள் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. எனவே இந்தப் படுகொலைக்கு அதிமுக காரணம் என்பது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், திமுக தலைமையிலான கூட்டணி 200-க்கும் மேற்பட்ட பகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போவதாக பல்வேறு அதிகாரிகளும் சொல்லியதை நான் இங்கு கூறுகிறேன். மு.க.ஸ்டாலின் நிச்சயம் ஆட்சியில் அமர்வார். மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் பல்வேறு சட்டங்கள் அகற்றப்படும் எனவும், திமுக ஆட்சியில் அமர்ந்தால் தான் அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ முடியும் என அவர் தெரிவித்தார்.
அரக்கோணம் இரட்டை கொலை வழக்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த வேல்முருகன்,“அங்கு நடந்தது மாபெரும் படுகொலை. அதை நியாயப்படுத்த முடியாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்து கொள்கிறேன். இதற்கு தமிழக காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன். இதில் கைது செய்யப்பட்டவர்கள் அதிமுக பொறுப்பில் இருப்பவர்களின் மகன்கள். ஆகவே அதில் அதிமுக தான் முழு தொடர்பில் இருக்கிறது.
கொலை செய்தவர்கள் எந்த கட்சியாக இருக்கட்டும், எந்த சாதியாக இருக்கட்டும். இது மன்னிக்க முடியாத ஒன்று. அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும். அப்போது தான் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கும்” இவ்வாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Velmurugan