மயிலாடுதுறையில் ஆ.ராசாவின் உருவபொம்மையை எரித்து அ.தி.மு.க ஆர்பாட்டம்

மயிலாடுதுறையில் ஆ.ராசாவின் உருவபொம்மையை எரித்து அ.தி.மு.க ஆர்பாட்டம்

ஆ.ராசா

மயிலாடுதுறையில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் உருவப்படத்தை எரித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Share this:
தி.மு.க துணைப் பொதுச் செயலாளராகவும், எம்.பியாகவும் உள்ள ஆ.ராசா சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டபோது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசியது விமர்சனத்துக்கு உள்ளானது. இதுகுறித்து, அ.தி.மு.க சார்பில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆ.ராசா மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் மயிலாடுதுறையில் தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரின் தடையை மீறி திடீரென தி.மு.க துணைப் பொதுசெயலாளர் ஆ.ராசாவின் உருவபொம்மையில் மாட்டு சாணியை ஊற்றி அவமரியாதை செய்தனர். மேலும், அவர்கள் ராசாவின் உருவப்படத்தை எரித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து போலீசார் எச்சரித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுகவினர், பா.ம.க உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்: கிருஷ்ணகுமார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: