மனைவியை வெட்டி கொலை செய்து கணவன் தற்கொலை - போலீஸாருக்குத் தெரியாமல் உறவினர்கள் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றபோது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த மேலூர் கிராமத்தில் விவசாயி வெங்கட்ராமன் (55 ) என்பவர் தனது மனைவி சரஸ்வதியை (50) வெட்டிக் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இருவரது சடலத்தையும் போலீஸாருக்குத் தெரியாமல் எரியூட்ட உறவினர்கள் இடுகாட்டுக்கு எடுத்துச் சென்ற நிலையில் தா.பேட்டை போலீசார் இருவரது சடலத்தையும் கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பாலையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேலகருப்பூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை மேற்கொண்டவர்கள் மீது கதண்டு விஷவண்டு தாக்குதல். 24 பேர் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது குறித்து பாலையூர் போலீசார் விசாரணை.
மதுரை வண்டியூர் கண்மாயைத் தூர்வாரி தீவு போன்ற அமைப்பை பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஏற்படுத்தப்படும் - நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய மதுரை வடக்கு எம்.எல்.ஏ., தளபதி, மதுரை வண்டியூர் கண்மாயை தூர்வாரி கரையை அகலப்படுத்துவதோடு, சுற்றுலாத்தலமாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மதுரை வண்டியூர் கண்மாயைத் தூர்வாரி தரையினை அகலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அதே போன்று கண்மாயின் மறுபக்கம் தீவு போன்ற 3 அமைப்புகள் உருவாக்கப்பட்டு, கட்டுமான பணிகள் மேற்கொண்டு, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கண்மாயை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.