மதுரை மேம்பால விபத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

விஜயகாந்த்

மதுரை மேம்பால விபத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

 • Share this:
  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை நத்தம் சாலையில் மதுரை - செட்டிகுளம் இடையே 7 கிலோமீட்டர் தொலைவிற்கு, 694 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்து தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளது வேதனை அளிக்கிறது.

  மேலை நாடுகளில் நவீன தொழிற்நுட்பத்தை கொண்டு, இரண்டு அடுக்கு, மூன்றடுக்கு மேம்பாலங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில், மதுரை நத்தம் சாலையில் கட்டப்பட்ட சாதாரண மேம்பாலம் தரமற்றதாக இருந்ததே பாலம் இடிந்து விழுந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது.

  Also read: திருச்சியில் விரைவில் வருகிறது புதிய காவிரி பாலம் - அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

  கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட குடிசை மாற்று குடியிருப்புகள் தரமற்றதாக உள்ளது என செய்திகள் வெளியாகிய நிலையில், தற்போது மதுரை நத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதை தேமுதிக வண்மையாக கண்டிக்கிறது.

  எனவே இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, மீண்டும் இது போன்ற விபத்துகள் தமிழகத்தில் வேறெங்கும் நடைபெறா வண்ணம் தமிழக அரசு தனி கவனம் செலுத்தி, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Esakki Raja
  First published: