‘நான் இல்லையென்றால் வன்னிய சமுதாயம் கடைக்கோடியில் நின்றிருக்கும்’: ராமதாஸ்!

கோப்புப் படம்

பாமக ஆட்சியை பிடிக்கவில்லை என்ற வருத்தம், ஏக்கம்  வாட்டிக்கொண்டு இருக்கிறது. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைத்தது மகிழ்ச்சிதான்; ஆனால் பெருமகிழ்ச்சி கிடையாது என்று ராமதாஸ் பேசினார்.

 • Share this:
  தான் மட்டும் பிறக்கவில்லை என்றால் கல்வி, அரசியல், சமூகம் என அனைத்திலும் வன்னிய சமுதாயம் கடைக்கோடியில் நின்றிருக்கும் என பாராட்டு விழாவில் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

  கல்வி மற்றும்  வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது. இதையடுத்து, இந்த இடஒதுக்கீடு கிடைப்பதற்கு போராடியதற்காக பாமக நிறுவனர் ராமதாஸுக்கு  பாமக, வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் ஆகியவற்றின் சார்பில் நேற்று இணையவழியில் பாராட்டு விழா நடைபெற்றது. பாமக தலைவர் ஜி.கே.மணி இதற்கு தலைமை தாங்கினார்.  பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு, பாடகர் புஷ்பவனம் குப்புசாமி உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதில் பேசிய ராமதாஸ், “ பாமக ஆட்சியை பிடிக்கவில்லை என்ற வருத்தம், ஏக்கம்  வாட்டிக்கொண்டு இருக்கிறது. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைத்தது மகிழ்ச்சிதான்; ஆனால் பெருமகிழ்ச்சி கிடையாது.   பாமக ஆட்சியில் அமர்ந்தால்தான் பெருமகிழ்ச்சி ஏற்படும். ஆட்சியில் அன்புமணி அமரவேண்டும் என்பதை நோக்கி பயணப்பட வேண்டும்” என்று பேசினார்.  தான் மட்டும் பிறக்கவில்லை என்றால் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், சமூகம் என அனைத்திலும் வன்னியர் சமூதாயம் கடைக்கோடியில் இருந்து இருக்கும் என குறிப்பிட்ட ராமதாஸ்,  10.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களுக்கு அவர்களின் சாதிக்கு கடந்த 33 ஆண்டுகளில் என்ன கிடைத்துள்ளது  என்பதை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் கேட்டுப்பாருங்கள் என்றும் வறட்டு கூச்சல் போட வேண்டாம் என்றும் பேசினார்.

  இதையும் படிங்க: தடை விதித்தால் தடையை மீறி போராடுவோம் - ஹெச். ராஜா ஆவேசம்!


  தான் எப்போது சமூக நீதியின் பக்கம் நிற்பவன் என்று கூறிய அவர்,  ‘மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்று இடஒதுக்கீடு முறையை அறிவித்ததால் வி.பி.சிங்கின் பிரதமர் பதவியே பறிபோனது. வி.பி.சிங்கின் புகைப்படம் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டும்’ என்று பேசினார்.

  மேலும் படிக்க: தடையை மீறி செயல்பட்ட சரவணா செல்வரத்தினம் கடை: மாநகராட்சி எச்சரிக்கை!


  நிகழ்வில் பேசிய அன்புமணி ராமதாஸ், வன்னியர்களுக்கான ஒட ஒதுக்கீட்டை சாதிக்கான இட ஒதுக்கீடாக பார்க்க வேண்டாம், தமிழகத்தின் வளர்ச்சிக்கானதாக பார்க்க வேண்டும். பின் தங்கிய வன்னிய சமுதாயம் வளர்ச்சியடைந்தால் தமிழகம் வளர்ச்சி பெறும் என்று கூறினார்.
  Published by:Murugesh M
  First published: