ரேஷன் கடைகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் நியமனம் - தமிழக அரசு உத்தரவு

மாதிரிப் படம்

ரேஷன் கடைகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 • Share this:
  தமிழகத்தின் அனைத்து கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

  மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழகத்தில் மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த ஆய்வை மேற்கொண்ட மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையின் கண்காணிப்பு நிறுவனம் மூலம் சில பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

  அதில், ரேஷன் கடைகளில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை விற்பனையாளர் அல்லது கட்டுனராக பணியில் அமர்த்துவது தொடர்பாக பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் அவர்களை பணியமர்த்துவது தொடர்பான அறிவுரைகளை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வழங்கியுள்ளார்.

  Also read: கடவுள் இல்லை என்று சொன்ன ஸ்டாலின் ஆண்டாள் கோவில் கோபுரமுத்திரையை பயன்படுத்துகிறார்: அண்ணாமலை

  அதன்படி, இரண்டு பேர் பணியாற்றக்கூடிய ரேஷன் கடைகளில் மட்டும் மாற்றுத்திறனாளிகளை பணியில் அமர்த்தலாம். ஒரு நபர் மட்டுமே பணியாற்றக்கூடிய ரேஷன் கடைகளில் அவர்களை பணியமர்த்த கூடாது.

  பெண் பணியாளர்களை பொருத்தவரை, ஆண் பணியாளர்களுக்கு இணையாக அவர்களை பணியமர்த்தலாம். ஆனாலும் பெண் பணியாளர்களை நியமனம் செய்யக்கூடிய ரேஷன் கடைகளில் கழிப்பறை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Esakki Raja
  First published: