ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு புதிய செயலாளரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையம் இதுவரை 154 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. அதன்படி, 90 சதவீத விசாரணை நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் செயலாளராக இருந்த சிவசங்கரன் மருத்துவ விடுப்பில் சென்ற நிலையில், புதிய செயலாளராக சஷ்டி சுபன் பாபுவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Must Read: ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமைகளாகும் இளைஞர்கள்.. தடை செய்ய முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
செயலாளர் இல்லாமல் கடந்த சில விசாரணைகள் நடந்து வந்த நிலையில் புதிய செயலாளரை தமிழக அரசு தற்போது நியமித்துள்ளது.ஆறுமுகச்சாமி ஆணைத்தில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதற்கு முன்னதாக அப்போலோ மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.