Home /News /tamil-nadu /

திமுக துணை பொதுச் செயலாளராக கனிமொழியை நியமிக்க வேண்டும்.. மு.க.ஸ்டாலினுக்கு நிர்வாகி கடிதம்

திமுக துணை பொதுச் செயலாளராக கனிமொழியை நியமிக்க வேண்டும்.. மு.க.ஸ்டாலினுக்கு நிர்வாகி கடிதம்

திமுக எம்பி கனிமொழி

திமுக எம்பி கனிமொழி

kanimozhi: திமுக துணை பொதுச் செயலாளராக கனிமொழியை நியமிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு நிர்வாகி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில், அப்பொறுப்பை திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழிக்கு வழங்க வேண்டும் என அம்பத்தூர் கிழக்கு பகுதி திமுக அவை தலைவர் ராஜேந்திரன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    திமுகவின் துணைப்  பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அக்கட்சியில் இருந்து விலகினார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்ட விளக்க கடிதத்தில், “. அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதியன்று பதிவியிலிருந்தும். கட்சியிலிருந்தும் விலகுவதாக எனது விலகல் கடிதத்தை தலைவர் தளபதி அவர்களுக்கு அனுப்பிவிட்டேன்” என தெரிவித்திருந்தார்.

    சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து விலகியதையடுத்து அவர் வகித்துவந்த துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு யாருக்கு வழங்கப்படும் என கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், அப்பொறுப்பை கனிமொழிக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இது தொடர்பாக அம்பத்தூர் கிழக்கு பகுதி திமுக அவை தலைவர் ராஜேந்திரன், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ’ தாங்கள் ஓயாது உழைக்கும் கட்சிப் பணியை போல், கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல், 2022ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் உங்களின் அறிவுரையை ஏற்று தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து திமுக வெற்றிக்காக உயராது உழைத்தவர் கனிமொழி எம்பி.

    இதையும் படிங்க: சேகர் பாபு எவ்வளவு சாமி கும்பிட்டாலும் மாநகராட்சி நன்றாக வேலை செய்தால்தான் மீண்டும் ஆட்சியமைக்க முடியும் – அமைச்சர் கே.என்.நேருவின் பேச்சால் சிரிப்பலை

    கருணாநிதி விட்டு சென்ற பணியை தாங்கள் எப்படி சிறப்பாக செய்து தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றி வருகிறீர்களோ, திமுகவை கட்டி காத்து வருகின்றீர்களோ, அதேபோல், தங்களுக்கு உறுதுணையாகவும் தங்களை பின்பற்றியும் திமுக பணியாற்றி தங்களை போல் சிறப்பாக செயல்பட்டு கட்சிக்கு நற்பெயரை ஏற்படுத்தி கொடுக்க கூடிய வல்லமை பெற்ற கனிமொழிக்கு திமுகவின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பை வழங்க வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: DMK, Kanimozhi, MK Stalin

    அடுத்த செய்தி