பொறியியல், கலைக் கல்லூரிகளுக்கு வரும் 26ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் அறிவிப்பு

மாணவர் சேர்க்கை விண்ணப்பம்

தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், கல்லூரிகள் சேர்வதற்கான விண்ணப்பம் எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி மாணவர்கள், பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பான அறிவிப்பை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார்.

  • Share this:
பொறியியல் மற்றும்  கலைக்கல்லூரிகளுக்கு, வரும் 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில்,  ன்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,  திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சிறப்பு விரிவுரையாளர்களை தொடர்ந்து பணியாற்ற அனுமதி அளித்ததற்கு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும்,  சிறப்பு விரிவுரையாளர்களுக்கு நேர்முகத்தேர்வு முறையை ரத்து செய்து பணி மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கடந்த ஆட்சியில் சிறப்பு விரிவுரையாளர்களை  பணி நிரந்தரம் செய்கிறோம் எனக்கூறி ஊழல் நடைபெற்றது. அது அனைத்தும் தற்போது கலைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் பொன்மூடி கூறினார்.

மேலும் படிக்க: ரயில்வே பணிகளில் 50% இடங்களை தமிழ்நாட்டவருக்கு ஒதுக்க வேண்டும்.. 88% பணிகள் பிற மாநிலத்தவருக்கா?




அமைச்சர் பொன்முடி


தொடர்ந்து பேசிய அவர்,  ‘பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வரும் 22ம் தேதி மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பொறியியல், கலைக்கல்லூரி அனைத்திற்குமான மாணவர் சேர்க்கைக்கு வரும் 26ம் தேதி முதல் ஆன்லைனின் விண்ணப்பிக்கலாம் . vஆகஸ்ட் 24ம் தேதி இதற்கு அவகாசம் வழக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்த இரு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!


மேலும், தமிழகத்தில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு விரிவுரையாளர்கள் தங்கள் பணியை முறையாக மேற்கொள்ளலாம்’ என்றார்.

 
Published by:Murugesh M
First published: