Home /News /tamil-nadu /

ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு... எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு... எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு வரும் 15-ம் தேதி முதல் ஏப். 5-ம் தேதி வரை http://www.trb.tn.nic.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வரும் 15-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வருகிற ஏப்ரல் 5-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முதல் தாள், இரண்டாம் தாள் என்ற அடிப்படையில் இருமுறையில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தபடும் என்றும் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் பள்ளியில் எடுத்த மதிப்பெண் மற்றும் தகுதித் தேர்வு மதிப்பெண்ணைக் கொண்டு அரசு பள்ளிகளில் உள்ள காலி இடங்களில் பணி நியமனம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இனி பணி நியமனத்திற்கு என்று தனியாக தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழை கொண்டு பணியில் சேரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற வேண்டும் என்றால், மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம் என்று ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முக்கியமான தேதிகள்:

ஆன்லைனில் விண்ணபிக்க தொடங்கும் நாள்: 15.03.19
ஆன்லைனில் விண்ணபிக்க கடைசி நாள்: 05.04.19

ஆன்லைனில் விண்ணபிக்கும் முறை: www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தாள் -1, தாள்- 2 என்று தனித்தனியே விண்ணபிக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

தேர்வுக்கட்டணம்:

எஸ்சி / எஸ்டி பிரிவினர் அல்லாதோருக்கு கட்டணம்: ரூ. 500
எஸ்சி/எஸ்டி மற்றும் PWD ஆகியோருக்கான கட்டணம் :ரூ. 250

தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:

ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும். இதில் முதல் மற்றும் 2-ம் தாள் தேர்வுகளுக்கு தனித்தனியாக தேர்வுக்கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

முதல் தாளுக்கான கல்வித்தகுதி: பன்னிரண்டாம் வகுப்பை 50 சதவீதம் மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 2 வருட டிப்ளமோ இன் எலமெண்டரி எடுகேஷன் முடித்தவர்களோ அல்லது 4- வருட பேச்சுலர் இன் எலமெண்டரி எடுகேஷன் முடித்தவர்களோ அல்லது 2 - வருட டிப்ளமோ இன் எடுகேஷன் படிப்பை படித்த்வர்களோ அல்லது பி.எட் படிப்பை முடித்தவர்களோ அல்லது கல்லூரியில் கடை வருடம் படித்துக்கொண்டிருப்பவர்களோ தகுதியானவர்கள்.

இதில் இந்த தகுதியுள்ளவர்கள் அனைவரும் 2-ம் தாளுக்கான தேர்வுக்கு விண்ணபிக்க தகுதியானவர்கள். அத்துடன் அவர்கள் இளங்கலை பட்டப்படிபில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு, http//trb.tn.nic.in/TET_2019/tett2019.pdf - என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.

கவனத்திற்கு:

முதல் மற்றும் 2-ம் தாள்களுக்கான தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Also Read...  இன்று விடுதலை ஆகிறார் அபிநந்தன்

Also see... ஜெயலலிதாவின் அப்போலோ நாட்கள்!
Published by:Vaijayanthi S
First published:

Tags: TET

அடுத்த செய்தி