உடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

2016ம் ஆண்டு உடுமலைபேட்டையில் ஒரு கும்பல் சங்கரை வெட்டிக் கொன்றது.

 • Share this:
  உடுமலை சங்கர் கொலை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

  திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா மாற்று சமூகத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், 2016ம் ஆண்டு உடுமலைபேட்டையில் ஒரு கும்பல் சங்கரை வெட்டிக் கொன்றது.

  இந்த வழக்கில், கௌசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் திருப்பூர் நீதிமன்றம் வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், குற்றவாளிகள் 5 பேரின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்தது.

  மேலும், கவுசல்யா தந்தை சின்னசாமியை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது.இந்நிலையில், உடுமலை சங்கர் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சங்கரின் சகோதரர் விக்னேஸ்வரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  Published by:Vijay R
  First published: