ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மேல்முறையீடும், கேவியட் மனுவும்: 18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கின் அடுத்த கட்டம்

மேல்முறையீடும், கேவியட் மனுவும்: 18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கின் அடுத்த கட்டம்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று 18 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் மனு அளித்ததை தொடர்ந்து அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து 18 எம்எல்ஏக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு விசாரித்து ஜூன் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டு, 3-வது நீதிபதியாக நீதிபதி சத்யநாராயணன் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கை ஜூலை 23-ம் தேதி முதல் நீதிபதி சத்யநாராயணன் விசாரித்து வந்தார்.

அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், ஆகஸ்ட் 31-ம் தேதி நீதிபதி சத்தியநாராயணன் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்நிலையில் நேற்று நீதிபதி சத்யநராயணன் 18 எம்.எல்.ஏக்களின் பதவி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பை வழங்கினார்.

இந்நிலையில் மேல்முறையீடு செய்யப்படுமா என்று டிடிவி தினகரனிடம் கேட்டபொழுது 18 எம்.எல்.ஏக்களிடமும் கலந்து ஆலோசித்த பின்பே முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று தினகரன் ஆதரவாளர் எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் பத்திரிகையாளர்களை சந்தித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு சார்பில் இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்கக் கூடாது என்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by:Saroja
First published:

Tags: ADMK, TTV Dhinakaran