தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக பொறுப்பேற்றார் அப்பாவு

அப்பாவு

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

 • Share this:
  தமிழக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு  நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

  இதில் திமுக சார்பாக ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மு.அப்பாவு பேரவைத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல பேரவை துணைத்தலைவருக்கான பதவிக்கு கீழ்பென்னாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கு.பிச்சாண்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

  இதற்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில் பேரவைத் தலைவராக அப்பாவுவும், துணைத்தலைவராக பிச்சாண்டியும் போட்டியின்றி தேர்வாகினர்.

  இந்நிலையில் 16-வது சட்டசபை கூட்டத்தின் 2-வது நாள் இன்று தொடங்கியது. சபாநாயகராக போட்டியின்றி தேர்வான அப்பாவுவை திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அழைத்து சென்று சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர். சபாநாயகர் பொறுப்பேற்ற அப்பாவு உறுதி மொழியேற்றார். அதன்பின் துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
  Published by:Vijay R
  First published: