ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை விவகாரம்! அப்பாவு கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை விதித்த உச்சநீதிமன்றம், விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை விவகாரம்! அப்பாவு கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
  • News18
  • Last Updated: October 14, 2019, 10:41 PM IST
  • Share this:
ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற திமுக வேட்பாளர் அப்பாவு வைத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அப்பாவு, 203 தபால் வாக்குகள் செல்லாது என கூறப்பட்டு எண்ணப்படவே இல்லை என முறையிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டது. ஆனால், மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை விதித்த உச்சநீதிமன்றம், விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


இந்நிலையில், இன்று நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வில், அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, இன்பதுரை தொடர்ந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். ஆனால் இந்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். வரும் 21ஆம் தேதி நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 23ம் தேதி ராதாபுரம் தொகுதி வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Also see:

First published: October 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...