இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், மருத்துவர்களை கண்டறியும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பதிவு பெற்ற மருத்துவர்களை எளிதாக கண்டறிய
Search for doctor app என்ற செயலியை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிமுகப்படுத்தி உள்ளது. அஞ்சல் குறியீட்டு எண், பகுதியை வைத்து தேடினால் அந்த பகுதியில் உள்ள மருத்துவர்கள் பட்டியல் கிடைக்கும். மருத்துவர்களின் அனுபவம், அவர்கள் எந்த துறை வல்லுனர் உள்ளிட்ட தகவல்களும் கிடைக்கப்பெறும். இதன்மூலம் பொதுமக்கள் அவசர காலங்களில் தங்களுக்கு அருகில் உள்ள மருத்துவர்களை எளிதாக கண்டறியமுடியும். இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் இதுபோன்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் 1.60 லட்சம் பதிவு செய்யபட்ட மருத்துவர்கள் உள்ளதாகவும், இந்த செயலியில் தற்போது 80 ஆயிரம் மருத்துவர்கள் இணைந்துள்ளதாகவும் தலைவர் செந்தில் தெரிவித்தார். இந்த செயலியை நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தொடங்கி வைத்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கொரோனா காலகட்டத்தில் நிறைய போலி மருத்துவர்கள் உருவாகினர் என்றும், இந்த செயலி மூலம் சரியான மருத்துவர்களிடம் மக்கள் சிகிச்சை பெறுவதை உறுதி செய்ய முடியும் என்றார்.
அதேபோல், மருத்துகளை பரிந்துரைக்கும் செயலி மற்றும் மருத்துவ சான்றிதழ் பெறவும் செயலி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலிகளில், தகவல்களை பாதுகாக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.