அண்ணாமலை ஆதாரத்தையும் இன்றே வெளியிடவேண்டும். இல்லை என்றால் வழக்கப்படி மன்னிப்பு கேட்க வேண்டும் என செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளது என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறும் அண்ணாமலை தன்னிடம் உள்ள ஆதாரங்களை 24 மணி நேரத்தில் வெளியிட வேண்டும் அப்படி அவரிடம் எந்த ஆதாரமும் இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறினார். தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள இது போன்ற செய்திகளை வெளியிடுகிறார்கள் ஆதாரம் இருந்தால் வழக்கு தொடுங்கள் அதையும் சந்திக்க தயார் என்று திட்டவட்டமாக கூறினார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறிவிப்பை தொடர்ந்து அண்ணாமலை தனது ட்விட்டரில் பதிலளித்தார்.அதில், மின்துறை அமைச்சர் ஆதாரம் கேட்கிறார். அவருக்கான ஒருசாம்பிள். தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த பல மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை. பில் அனுமதிக்கு 4% கமிஷனை எடுத்துக் கொண்ட பிறகு சமீபத்திய நாட்களில் திடீரென்று ரூ.29.64 கோடி பணம் செலுத்தப்பட்டது. பதில் சொல்லுங்கள் என்றார்.
இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, “ மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதென அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கையில் இருந்தும், அந்த தொகையையும் 29.99 கோடியென சரியாக எழுத கூட தெரியாமல். அதிமேதாவியாக எண்ணி, 4% கமிஷனென மீண்டும் பொய் புகார் கூறி கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பார்க்கும் அண்ணாமலை இதற்கான ஆதாரத்தையும் இன்றே வெளியிடவேண்டும். இல்லை, அவர்களது வழக்கப்படி மன்னிப்பு கேட்க வேண்டும்.
மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதென திரு.அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கையில் இருந்தும்,அந்த தொகையையும் 29.99 கோடியென சரியாக எழுத கூட தெரியாமல், (1/4) pic.twitter.com/sQu1KHbjAL
2021 மார்ச் மாதம் முதல் 06.05.2021 வரை, மின் கொள்முதல், தளவாட கொள்முதல் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சேர வேண்டிய ரூ. 15541 கோடி நிலுவையில் இருந்தது. அக். 1ல் PFC & REC நிறுவனங்களிடமிருந்து நிதி வந்த பின், தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலகத்தில் நிலுவை தொகைகள் சரி பார்க்கப்பட்டு, அந்தந்த மின் பகிர்மான மற்றும் மின் உற்பத்தி வட்டத்திற்குரிய மேற்பார்வை மற்றும் தலைமை பொறியாளர்கள் அலுவலக வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே வழக்கமான நடைமுறை” எனப் பதிலளித்துள்ளார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.