Apollo Drive Thru Vaccination Camp: அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தில் டிரைவ்-இன் தடுப்பூசி முகாம் தொடக்கம்!

அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையம், டிரைவ்-இன் தடுப்பூசி முகாம்

பயனாளிகள் தங்களை கோவின் போர்ட்டல் தளத்தில் பதிவு செய்து, காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தில் தடுப்பூசி போடலாம் என்று பிரீதா ரெட்டி தெரிவித்தார்.

  • Share this:
தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளின் முதல் புரோட்டான் சிகிச்சை மையமான அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையம் இன்று டிரைவ்-இன் கொரோனா தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்தது.

இந்த முகாமை அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மைய வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவர் ப்ரீதா ரெட்டி கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக ஒரு மருத்துவமனைக்குள் நுழைவது பலருக்கு நெருடலாக இருப்பது தடுப்பது, சரியான நேரத்தில் தடுப்பூசி எடுப்பதில் ஒரு தடையாகவே உள்ளது. அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தில் இந்த தற்காலிக டிரைவ் இன் தடுப்பூசி முகாம், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஒரு வாய்ப்பாகும். இங்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருபவர்கள் தங்களின் கார்களை விட்டு இறங்கக் கூட தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் அவர்களுக்காக ஒதுக்கப்படும் வாகன நிறுத்துமிடத்தில் தடுப்பூசிக்கு பிந்தைய கண்காணிப்புக்காக 20 நிமிடங்களில் தங்களின் கார்களிலேயே ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். அதன் பின்னர் அவர்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக திரும்பிச் செல்லலாம்.

Also Read:  2020ல் அதிக அந்நிய நேரடி முதலீடு கிடைத்த நாடுகளில் இந்தியாவுக்கு 5வது இடம் - ஐ.நா தகவல்!

இந்த நிகழ்ச்சியினை தொடங்கி வைத்த பின்னர் அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவர் ப்ரீதா ரெட்டி பேசுகையில், “தடுப்பூசிக்காக கூட்டத்தில் காத்திருக்க வேண்டுமே என்ற அச்சத்தில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை தவிர்ப்பதை கவனித்த பிறகு, கூடுதல் பாதுகாப்பை அளிக்கும் எங்களின் டிரைவ் இன் தடுப்பூசி முகாமினை தொடங்கினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த முகாமில் பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்பதைக் பார்க்கிறோம், தடுப்பூசிக்கான ஒவ்வொரு டோஸும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் நாங்கள் இந்த காரணத்திற்காக முற்றிலும் கடமைப்பட்டுள்ளோம்.

Also Read:   Beast - விஜய் நடிக்கும் 65வது படத்தின் டைட்டில் வெளியானது!

பயனாளிகள் தங்களை கோவின் போர்ட்டல் தளத்தில் பதிவு செய்து, காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தில் தடுப்பூசி போடலாம் என்று பிரீதா ரெட்டி தெரிவித்தார்.
Published by:Arun
First published: