• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் - உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அப்போலோ முடிவு

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் - உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அப்போலோ முடிவு

அப்போலோ மருத்துவமனை

அப்போலோ மருத்துவமனை

உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டால் ஆணையத்தின் விசாரணை காலதாமதம் ஆக வாய்ப்பு உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மருத்துவ குழு அமைத்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொள்வது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அப்போலோ நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிலதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆறுமுகசாமி ஆணையம் இதுவரை ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து போது பதவியிலிருந்த அதிகாரிகள், உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டது.

ஆறுமுகசாமி ஆணையம் தங்களது தரவுகளை தவறுதலாக புரிந்து கொண்டுள்ளதாகாவும், மருத்துவர்களின் பதிலை சரியாக புரிந்து கொள்ளவில்லை என அப்போலோ நிர்வாகம் குற்றம்சாட்டியது.

மருத்துவ குழு அமைத்து ஆறுமுகசாமி ஆணையம் மருத்துவர்களை விசாரிக்க வேண்டும் என அப்பல்லோ உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தது.

Also Read:  கமலுக்கு ஆதரவு இல்லை...? நட்பைக் கெடுத்துவிடாதீர்கள் - ரஜினிகாந்த்

Also Read :  உஷார்... தமிழகத்தின் உள்பகுதிகளில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் விசாரணை இறுதி கட்டத்தில் உள்ளதால், விசாரணை மேற்கொள்ள தடையில்லை என்று தீர்ப்பளித்து வழக்கை தள்ளுபடி செய்த து. இதை தொடர்ந்து அப்பல்லோ மருத்துவர்கள் பணியாளர்கள் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைக்கு 10 மற்றும் 11 ம் தேதிகளில் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அப்பல்லோ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால், நாளை விசாரணைக்கு அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜராவது கேள்விக் குறியாகியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டால் ஆணையத்தின் விசாரணை காலதாமதம் ஆக வாய்ப்பு உள்ளது.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 6 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் உள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சம்மன் அனுப்பி விசாரிக்காமல் அப்பேலோ மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பியது ஏன் எனவும் சசிகலா தரப்பு கேள்வி எழுப்பி உள்ளனர்.

Also Watch : டிடிவி தினகரனின் தகுதி என்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: