முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஜெயலலிதா உணவுக்கு மட்டும் ரூ.1.17 கோடி செலவு - அப்போலோ மருத்துவமனை

ஜெயலலிதா உணவுக்கு மட்டும் ரூ.1.17 கோடி செலவு - அப்போலோ மருத்துவமனை

கோப்பு படம்

கோப்பு படம்

2016-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்துள்ளார்.

  • Last Updated :

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது உணவுக்காக மட்டும் ரூ.1.17 கோடி செலவானதாக அப்போலோ மருத்துவமனை ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையத்தில், அப்போலோ மருத்துவமனை ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான தகவல்களை தாக்கல் செய்துள்ளது.

2016-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்துள்ளார்.

அப்போலோ மருத்துவமனை தாக்கல் செய்த அறிக்கை

சிகிச்சை நாட்களில் உணவுக்காக மட்டும் ரூ.1.17 கோடி செலவாகியுள்ளதாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அதில், “மொத்தமாக மருத்துவ சிகிச்சைக்கு ரூ.6.85 கோடி செலவாகியுள்ளது. லண்டன் மருத்துவர் பீலேவுக்கு ரூ.92.07 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து பிஸியோ சிகிச்சை அளித்த மருத்துவனைக்கு ரூ.1.29 கோடி செலவாகியுள்ளது. அதிமுக சார்பில் 6 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. இன்னும், 46.44 லட்சம் ரூபாய் பாக்கி உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also See..

top videos

    First published:

    Tags: Jayalalithaa Dead