ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்குவேன் என்று டிசம்பர் 3-ம் தேதி அறிவித்த ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ பட ஷூட்டிங்குக்கு ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கு படப்பிடிப்பில் இருந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவில் தொற்று இல்லை என்பது உறுதியானது.
இருந்தாலும் அவரது ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் ரஜினிகாந்த். இரண்டு நாள்கள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இரண்டு நாள் சிகிச்சைக்குப் பிறகே அவர் வீடு திரும்பினர். ஐதராபாத் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இறைவனின் அருளால் தற்போது நலமுடன் இருப்பதாக ரஜினிகாந்த் பேசும் வீடியோவை அப்போலோ நிர்வாகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.
When Thalaiva speaks the world listens!
2020 gave us the opportunity to serve India’s biggest star.
Apollo Family thanks him for his gracious words
& Wishes him a happy, healthy & prosperous year ahead!@rajinikanthpic.twitter.com/2pZ1ulE8WW
ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.