முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவக்குழு அமைக்கக் கோரிய அப்போலோ மருத்துவமனை வழக்கை வரும் வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் பற்றி தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி ஆறுமுகசாமி ஆணையம் தவறாக புரிந்துகொள்வதாகக் கூறியும், மருத்துவக்குழு அமைக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்போலோ நிர்வாகம் வழக்கு தொடர்ந்திருந்தது
அவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, அப்போலோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு பதிலாக, 23 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ நிபுணர் குழு அமைத்து விசாரணை நடத்தவேண்டும் என்றும், அப்போலோ தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
மருத்துவக்குழு அமைக்கும் வரை தங்கள் மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்ப ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த முறையீட்டை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.