ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

டிச. 5, 2016-ல் ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவியை அகற்றியது ஏன்? மருத்துவர் விளக்கம்

டிச. 5, 2016-ல் ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவியை அகற்றியது ஏன்? மருத்துவர் விளக்கம்

மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது...

மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது...

எக்மோ கருவி பொருத்திய பின்பு பல மணி நேரம் ஜெயலலிதாவின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்தோம் என்றார் மருத்துவர் மதன்குமார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஜெயலலிதாவுக்கு இதயம், நுரையீரலை மாற்றும் திட்டம் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மருத்துவர் மதன்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

  ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மதன்குமார் நேற்று ஆணையத்தில் ஆஜரானார்.

  ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி பொருத்திய மருத்துவர்கள் குழுவில் இடம்பெற்ற முக்கிய மருத்துவர்களில் இவரும் ஒருவர். ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி பொருத்தியதில் இருந்து அதை அகற்றும் வரை ஜெயலலிதாவுடன் இவர் இருந்துள்ளார்.

  விசாரணை ஆணையத்தில் அவர் அளித்த வாக்குமூலத்தில்,  ‘எக்மோ கருவி பொருத்திய பின்பு பல மணி நேரம் ஜெயலலிதாவின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்தோம். இருந்தபோதிலும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் டிசம்பர் 5-ம் தேதி இரவு எக்மோ கருவியை அகற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்’ என்று கூறி உள்ளார்.

  ஜெயலலிதாவுக்கு இதயம், நுரையீரலை மாற்றும் திட்டம் எதுவும் இருந்ததா? என்று விசாரணையின்போது நீதிபதி ஆறுமுகசாமி, மதன்குமாரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அவர், ’அதுகுறித்து விவாதிக்கப்படவில்லை’ என்று பதில் அளித்துள்ளார். மேற்கண்ட தகவல்களை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

  Also watch

  Published by:DS Gopinath
  First published:

  Tags: Arumugasamy commission, Jayalalithaa