கடந்த 8 ஆண்டுகளில், இரண்டாம்நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பதவி நியமனத்தில், முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2000 முதல் 2018 வரை நடந்த தேர்வு குறித்த தரவுகளை போக்குவரத்து துறையும், டிஎன்பிஎஸ்சி நிர்வாகமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தரமறுத்துள்ளதாக
குற்றம்சாட்டப்படுகிறது.
இதுகுறித்து தகவல் ஆணையத்திற்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணை மேற்கொண்ட ஆணையம், குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரிக்குமாறு டிஎன்பிஎஸ்சி-க்கு உத்தரவிட்டுள்ளது. ஜூன் மாத இறுதிக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Also Read : எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணி : 27 லட்ச ரூபாய் வரை சம்பளம்
2018-ல் நடத்தப்பட்ட தேர்வில், தோல்வியடைந்தவருக்கு சட்டவிரோதமாக பணி ஆணை வழங்கியதாக ஏற்கெனெவே குற்றச்சாட்டு எழுந்தது. பயிற்சி அடிப்படையில் பணி நியமனம் செய்வதில்லை என்று சொல்லிவிட்டு, விதிகளை மீறி 8க்கும் மேற்பட்டவர்களை பணியமர்த்தியதும் ஏற்கனவே அம்பலமானது. போலி ஆவணங்களை பயன்படுத்தி பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.