அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்பதைப் போலத்தான் பாஜகவின் கருத்து இருக்கிறது - முன்னாள் எம்.பி அன்வர் ராஜா பிரத்யேக பேட்டி
வருங்காலத்தில் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்பதைப் போலத்தான் பாஜகவின் கருத்து இருக்கிறது என அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்

அன்வர் ராஜா
- News18
- Last Updated: July 22, 2020, 10:16 AM IST
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு குறைவாவே உள்ள நிலையில், இப்போதே அரசியல் அனல் பரவத் தொடங்கியிருக்கிறது.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிய ஜனதா மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றும், இல்லையேல் வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறாது என்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
அதிமுக வின் கூட்டணியில் அங்கம் வகித்திருக்கும் பாரதிய ஜனதாவின் இந்த கருத்து குறித்து நியூஸ் 18 தமிழ்நாட்டிற்கு பேட்டியளித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மக்களின் ஆதரவு தங்களுக்கு இருக்கும் நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணனின் கருத்து எடுபடாது என்றார். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்பதை அவர் கண்ணாரக் காண்பார் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். தமிழகத்தில் பாஜக இடம்பெறும் கூட்டணி அரசு அமையும் என அக்கட்சியின் மாநிலத்தலைவர் முருகன் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதிமுக மீதான சி.பி.ராதாகிருஷ்ணனின் விமர்சனம் கவனிக்கத்தக்கதாக உள்ளது.
இது தொடர்பான கேள்விகளுக்கு நியூஸ் 18-க்கு பதிலளித்த முன்னாள் எம்.பி அன்வர் ராஜா கூறுகையில், “அதிமுக உடன் கூட்டணி வைத்தால் சில கட்சிகளுக்கு லாபம்; கூட்டணி வைக்காவிட்டால் அவர்களுக்கு தான் நஷ்டம்.
2016-ம் ஆண்டு தேர்தலில் கூட்டணி இல்லாமல் அதிமுக வெற்றிபெற்றுள்ளது.சி.பி ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக தலைவர் முருகன் சொல்லக்கூடிய கருத்து எவ்வளவு நியாயமானது? எவ்வளவு உள்நோக்கம் கொண்டது? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
படிக்க: வேண்டாம் N-95 முகக் கவசங்கள் - மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை
படிக்க: கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு நாள் குறித்த ரஷியா
படிக்க: த்ரிஷாவுடன் திருமணமா? நடிகர் சிம்பு தரப்பு விளக்கம்
கூட்டணியை நாங்களாக முடித்துக் கொள்வது இல்லை, அவர்களாக சென்றால் நாங்கள் கவலைப்படுவதும் இல்லை. வருங்காலத்தில் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்பதைப் போலத்தான் அவர்களின் கருத்து இருக்கிறது.
அதிமுக சாதாரண கட்சி அல்ல. எனவே வருங்காலத்தில் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிய ஜனதா மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றும், இல்லையேல் வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறாது என்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
அதிமுக வின் கூட்டணியில் அங்கம் வகித்திருக்கும் பாரதிய ஜனதாவின் இந்த கருத்து குறித்து நியூஸ் 18 தமிழ்நாட்டிற்கு பேட்டியளித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மக்களின் ஆதரவு தங்களுக்கு இருக்கும் நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணனின் கருத்து எடுபடாது என்றார். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்பதை அவர் கண்ணாரக் காண்பார் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.