Home /News /tamil-nadu /

மதுவிலக்குப் போராளி நந்தினிக்குக் கெட்டிமேளம் !

மதுவிலக்குப் போராளி நந்தினிக்குக் கெட்டிமேளம் !

மதுவிலக்குப் போராளி நந்தினி

மதுவிலக்குப் போராளி நந்தினி

'அநியாயத்துக்கு எதிரான எங்களது போராட்டத்தில் குணாவும் இணைய உள்ளார்’.

  • News18
  • Last Updated :
மதுவிலக்குக் கோரி தொடர்ந்து  பல்வேறு போராட்டங்களை நடத்தி வருபவரான மதுரை நந்தினி, தனது திருமண அறிவிப்பை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவியான நந்தினி, கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது தந்தை உடன் இணைந்து பல கட்டப் போராட்டங்களையும் அசராது நடத்தி வருபவர். மதுவிலக்குக் கோரி கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் காலத்திலேயே உண்ணாவிரதப் போராட்டத்தைத் தனது தந்தை உடன் இணைந்து நடத்தினார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் செயல்படும் போதெல்லாம் சற்றும் அசராமல் போராட்டக் களத்தில் குதித்துவிடுவார். கைது, சிறை, வீட்டுச்சிறை என அடுக்கடுக்காகத் தடைகள் விழுந்த போதிலும் தனது போராட்டக் குணத்திலிருந்து சற்றும் தொய்வு அடையாது போராடி வருகிறார் நந்தினி.

தொடர்ந்து போராட்ட, ஆர்ப்பாட்ட அறிவிப்புகள் மட்டுமே வெளியிட்டு வந்த நந்தினி, முதன்முறையாக திருமண நற்செய்தியை வெளியிட்டுள்ளார். தனது சிறு வயது நண்பரான குணா ஜோதிபாசு என்பவரை கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்கிறார் நந்தினி.

இதுகுறித்து நியூஸ்18-க்கு நந்தினி கூறுகையில், “குணாவும் நானும் 3 வயதிலிருந்தே நண்பர்கள். என் அப்பாவும் குணாவின் அப்பாவும் ஒன்றாகப் பணியாற்றியவர்கள். இதனால் சிறு வயதிலிருந்தே இரண்டு குடும்பங்களும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தோம்.

தற்போது, அநியாயத்துக்கு எதிரான எங்களது போராட்டத்தில் குணாவும் இணைய உள்ளார். எனக்கு இத்தனைக் காலமும் ஒரு சிறந்த நண்பராக பல உதவிகளைச் செய்து வந்தார். சமுதாய உணர்வோடு இருவரும் எங்களது திருமணப் பயணத்தைத் தொடர்வோம். இன்னும் திருமணத் தேதி நிச்சயிக்கப்படவில்லை. ஆனால், அடுத்த ஆறு மாத காலத்துக்குள் எங்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெறும்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும் பார்க்க: நான் மாற்றி பேசவில்லை, எல்லாரையும் மாற்றுவதற்காக பேசினேன் - சிம்பு
Published by:Rahini M
First published:

Tags: Activist Nandhini, Madurai

அடுத்த செய்தி