முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தஞ்சை கோயிலில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை

தஞ்சை கோயிலில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை

தஞ்சை பெரிய கோயில்

தஞ்சை பெரிய கோயில்

  • Last Updated :

தஞ்சை பெரிய கோயிலில் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். புராதன சிலைகள் மாற்றிவைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூடுதல் எஸ்.பி. ராஜாராமன் தெரிவித்தார்.

தஞ்சை பெரிய கோவிலுக்கு நேற்று பிற்பகலில் வந்த பொன்.மாணிக்கவேல் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர், அதிரடி சோதனை நடத்தினர். சோதனையை ஒட்டி கோவிலிலிருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் முதலில் வெளியேற்றப்பட்டனர். பின்னர் பக்தர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் அனுமதிக்குமாறு பொன் மாணிக்கவேல் அறிவுறுத்தினார்.

இதையடுத்து, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் எஸ்.பி., ராஜாராமன், பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். கோவிலில் எத்தனை புராதன சிலைகள் உள்ளன, அவை மாற்றிவைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தியதாக அவர் கூறினார். சில சிலைகளில் தமிழில் பெயர் பொறித்துள்ளது குறித்தும் விசாரணை நடத்தியதாக அவர் கூறினார். இதில், சில விவரங்கள் கிடைத்துள்ளதாகவும் ராஜாராமன் தெரிவித்தார்.

First published:

Tags: Anti idols smuggling, Ig ponmanikavel, Officers, Rajarajacholan, Tanjore temple