• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை... ஏராளமான ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் - தகவல்

எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை... ஏராளமான ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் - தகவல்

எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி

கோவை சுகுணாபுரம் பகுதியில் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் காலை 6 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share this:
    எஸ் பி வேலுமணி சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் சோதனையில் தற்போது வரை ஏராளமான ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்டவை பறிமுதல் செய்து வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சென்னையைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை நேற்று அளித்தார். அதில் அரசு டெண்டர் வாங்கித் தருவதாகக் கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தன்னிடம் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றிவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதேபோல் பல்வேறு புகார்கள் வந்ததுடன், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக எதிர்க்கட்சியாக இருந்த போது திமுகவும் ஆளுநரிடம் புகார் மனு அளித்திருந்தது. இந்த புகார்களின் அடிப்படையில் பல்வேறு ஆதாரங்களைத் திரட்டிய லஞ்ச ஒழிப்பு போலீசார் கோவை சுகுணாபுரம் பகுதியில் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் காலை 6 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதேபோல் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. வடவள்ளியில் உள்ள அதிமுக பிரமுகர் சந்திரசேகரன் வீட்டிலும் சோதனை தொடர்கிறது.தொண்டமுத்தூரில் உள்ள 5 பண்ணை வீடுகள் உட்பட கோவையில் மட்டும் 35 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

    இந்நிலையில் டெண்டர் ஒதுக்குவதில் ஏராளமான முறைகேடு ஏற்பட்டுள்ளது என்பதால் அது தொடர்பான ஏராளமான ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.



    சென்னையில் உள்ள எம்.எல்.ஏ. குடியிருப்பில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நடத்தப்படுவதை அறிந்து அங்கும் ஏராளமான அதிமுகவினர் குவிந்தனர். முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், பெஞ்சமின், அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆதி ராஜாராம் உள்ளிட்டோரும் அங்கு வந்தனர். தொண்டர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறியநிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். உள்ளே செல்ல முற்பட்ட சிலரை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அதேப்போன்று கோவை சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடைபெறுவதை அறிந்து ஏராளமான தொண்டர்கள் அங்கு குவிந்துள்ளனர். இதேபோல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் அங்கு வந்துள்ளதால், பரபரப்பான சூழல் நிலவுகிறது. அசம்பாவிதங்கள் நடப்பதை தவிர்க்க அப்பகுதியில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதனிடையே எஸ்.பி.வேலுமணி உட்பட 17 பேர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில். எஸ்.பி.வேலுமணி தனது பதவியை தவறாக பயன்படுத்தி முறைகேடாக நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது சகோதரர் மற்றும் உறவினர்களுக்கு அரசு டெண்டர்களை விதிமீறி செயல்படுத்தி உ்ள்ளார். . சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் ரூ.464 கோடி மற்றும் கோவை மாநகராட்சி ஒப்பந்தத்தில் ரூ.346 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: