Home /News /tamil-nadu /

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி தொடர்பான  26 இடங்களிலும் சி.விஜயபாஸ்கர் தொடர்பான 13 இடங்களிலும் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இரு முறை சோதனை நடத்தப்பட்ட நிலையில் , மூன்றாவது முறையாக இந்த சோதனையானது நடத்தப்படுகின்றது. அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல், முன்னாள் அமைச்சர், சி.விஜயபாஸ்கர் தொடர்பான 13 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Directorate of Vigilance and Anti-Corruption, SP Velumani, Vijayabaskar

    அடுத்த செய்தி