Home /News /tamil-nadu /

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

டிஎஸ்பி ஜெயராமன் இல்லம்

டிஎஸ்பி ஜெயராமன் இல்லம்

பொள்ளாச்சியில் துணைக் ஆணையராக ஜெயராமன் பணியாறி வரும் போது பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சாதகமாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

    பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த  டிஎஸ்பி ஜெயராமனுக்கு சொந்தமான  திண்டுக்கல் அசோக் நகர் பகுதியில்  உள்ள வீட்டில்   வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் உள்ளிட்டோரைபோலீசார் கைது செய்தனர். இந்நிலையில்,  திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் பொள்ளாச்சியில் துணைக் ஆணையராக பணியாறி வரும் போது பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சாதகமாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயராமன் மற்றும் பொள்ளாச்சி காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர்.  அதன்படி ஜெயக்குமார்  தூத்துக்குடி  மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக  பணிபுரிந்து வருகிறார்.

    தூத்துக்குடியில் இவர்  பணிபுரியும் இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதின்  அடிப்படையில் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்   பேரில் திண்டுக்கல் அசோக் நகர் பகுதியில் குடியிருந்து வரும் காவல்துறை துணை ஆணையர் ஜெயராமன் இல்லத்தில்  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேகரித்ததாக லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட  போலீசார்   சோதனை நடத்தி வருகின்றனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Dindigal, Pollachi sexual harassment

    அடுத்த செய்தி