முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு

எஸ்.பி.வேலுமணி

சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட அவருக்க சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

 • Share this:
  தமிழகம் முழுவதும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு தொடர்புள்ள 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

  கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் மீது மாநகராட்சி பணிகள் தொடர்பான டெண்டரில் மேசாடி செய்ததாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டது. இதையடுத்து வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

  இந்நிலையில் இன்று காலை கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட அவருக்க சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

  எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தி வருவதை அறிந்த அதிமுக தொண்டர்கள் அவர் வீடு முன் குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: