ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எஸ்.பி.வேலுமணி வீட்டில் விறுவிறு ரெய்டு.. நெருக்கமானவருக்கு நெஞ்சுவலி

எஸ்.பி.வேலுமணி வீட்டில் விறுவிறு ரெய்டு.. நெருக்கமானவருக்கு நெஞ்சுவலி

எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி

அறப்போர் இயக்கம், தி.மு.க கொடுத்த புகாரின் அடிப்படையில் வேலுமணி, அன்பரசன், சந்திரசேகர், கே.சி.பி சந்திரபிரகாஷ் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

என்னைத் தொட முடியாது! சவால் விடும் வேலுமணி.. அப்படின்னு பிரபல வார இதழில் வெளியான அட்டைப்படத்தை பார்த்து முடிப்பதற்குள் எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு அப்படிங்கிற செய்தி செவிக்கு எட்டியது.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சிதுறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் கொங்கு மண்டலத்துக்காரர். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களின் கையே ஓங்கியிருந்தது. அதில் மிகவும் முக்கிய நபராக விளங்கியவர் எஸ்.பி.வேலுமணி.

அப்போதே இவர் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தது எதிர்க்கட்சியாக இருந்த திமுக. மாநகராட்சி தொடர்பான டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே வழங்குவதாகவும் மற்ற ஒப்பந்த நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் புகார்கள் குவிந்தன. அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சார்பில் 2018-ம் ஆண்டே எஸ்.பி வேலுமணிக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டது. அப்போது  அ.தி.மு.க ஆளும் கட்சியாக இருந்ததால் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக பெரிதாக அக்‌ஷன் இல்லை.

Also Read: எஸ்.பி.வேலுமுணி உட்பட 17 பேர் மீது ஒப்பந்த முறைகேடு வழக்கு

2014 முதல் 2018 வரை சென்னை மாநகராட்சியில் 464 கோடி ரூபாய் மற்றும் கோவை மாநகராட்சியில் 346 கோடி ரூபாய்க்கான டெண்டர்கள் ஆகியவை எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான்  முக்கிய குற்றச்சாட்டே. கிராமப்புறங்களில் தெருவிளக்குகளை எல்.இ.டியாக மாற்றியதில் ஊழல் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அ.தி.மு.க ஆட்சியில் எங்கோ மூலைக்கு சென்ற ஃபலை தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் தூசு தட்டியது.

Also Read: SP Velumani : எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்த இதுதான் உள்நோக்கம் - பொள்ளாச்சி ஜெயராமன்

பிரபல வார இதழின் அட்டை படத்துக்கு வருவோம். சென்னையை சேர்ந்த திருவேங்கடம் 2014-ம் ஆண்டே எஸ்.பி.வேலுமணிக்கு அறிமுகமாகியுள்ளார். டெண்டர் ஒதுக்குவது தொடர்பாக எஸ்.பி.வேலுமணிக்கு 1 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். தேர்தல் வந்ததால் டெண்டர் விவகாரம் கொஞ்சம் தள்ளிப்போனது. 2016-ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்துள்ளது. அப்போது மீண்டும் எஸ்.பி.வேலுமணியின் கதவை தட்டியுள்ளார். டெண்டர் முடிச்சு கொடுக்கிறேன் கை செலவுக்கு ஒரு 20 லட்சம் கொடுத்துட்டு போன்னு சொல்லவும்.அதையும் கொடுத்துள்ளார். அமைச்சர் பி.ஏ கொஞ்சம் கவனிச்சிட்டு போங்கண்ணான்னு சொல்லவும் அவருக்கும் சில லட்சங்களை கொடுத்துள்ளார். எல்லாம் கைக்கூடி வரும் நேரத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவு கட்சிக்குள் பிரச்னை. திருவேங்கடத்தால் எஸ்.பி.வேலுமணியை நெருங்கவே முடியவில்லை. சமீபத்தில் போய் பார்த்திருக்கார். இனிமே இங்க வராதேன்னு மாஜி அமைச்சர் ஷாக் கொடுத்துள்ளார்.

திருவேங்கடம் நேற்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.அரசு டெண்டர் வாங்கித் தருவதாகக் கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தன்னிடம் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றிவிட்டதாக புகாரில் கூறியுள்ளார். மாஜி அமைச்சருக்கு எதிராக இப்படி பல்வேறு புகார்கள் குவிந்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த புகாரையடுத்து ஆதாரம் திரட்டிய லஞ்ச ஒழிப்பு போலீஸார் கோவை சுகுணாபுரம் பகுதியில் இருக்கும் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் காலை 6 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வேலுமணி சம்பந்தப்பட்ட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரெய்டு நடத்தி வருகின்றனர். வேலுமணியின் கோவை வீடு, தொண்டாமுத்தூர் பண்ணை வீடு, வேலுமணி சகோதரர் அன்பரசன் வீடு தமிழ்நாடு முழுவதும் சோதனை நடந்து வருகிறது.அறப்போர் இயக்கம், தி.மு.க கொடுத்த புகாரின் அடிப்படையில் வேலுமணி, அன்பரசன், சந்திரசேகர், கே.சி.பி சந்திரபிரகாஷ் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்திரபிரகாஷ்

எஸ்.பி பில்டர்ஸ், கான்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா, ஸ்ரீ மகா கணபதி ஜூவல்லர்ஸ், ஆலயம் பவுண்டேசன், வைடூரியா ஹோட்டல்ஸ், ரத்ன லட்சுமி ஹோட்டல்ஸ் என எல்லா இடங்களிலும் ரெய்டு நடந்து வருகிறது. டெண்டர் ஒதுக்குவதில் ஏராளமான முறைகேடு நடந்துள்ளதால் அது தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையின் போது கே.சி.பி இஞ்சினியரிங் நிறுவன மேலாண் இயக்குநர் சந்திரபிரகாஷ்-க்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தான் கடந்த 5 வருடங்களா கோவை மாநகராட்சி டெண்டர் பணிகளை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக தொண்டர்கள்

எஸ்.பி.வேலுமணி கோவை வீட்டில் ரெய்டுன்னு தெரிந்ததும் அங்கு தொண்டர்கள் குவியத் தொடங்கினர். எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு கூடியிருக்கும் அதிமுகவினர் முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுக அரசைக் கண்டித்தும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் அதிமுக தொண்டர்கள் முழக்கமிட்டு வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொண்டர்களுக்கு உணவு பொட்டலங்கள், டீ விநியோகிக்கப்பட்டது. இதனை வாங்கிக்கொண்ட தொண்டர்கள் எஸ்.பி.வேலுமணி வீட்டு வாசலில் அமர்ந்தபடி தெம்பாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். வெயில் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் ரோஸ்மில்க் வேறு கொடுக்கப்பட்டது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: S.P. Velumani, SP Velumani, Tamilnadu