• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் அதிரடி ரெய்டு... காரணம் என்ன?

எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் அதிரடி ரெய்டு... காரணம் என்ன?

எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் காலை 6 மணி முதல் லஞ்சஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

  • Share this:
    அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்று வரும் நிலையில் அவர் உட்பட 17 பேர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தபோது, அவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்த நிறுவனங்களுக்கு மட்டும் அதிக அளவில் ஒப்பந்த திட்டப் பணிகள் கொடுக்கப்படுவதாகவும், மற்ற ஒப்பந்த நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

    மேலும் கிராமங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றுவதில் ரூ.500 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாகவும் புகார் கூறப்பட்டன. அதேபோல் ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகள், சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டப்பணிகளில் தேவையான தொகையை விட அதிக தொகை நிர்ணயிக்கப்பட்டு மோசடிகள் நடந்துள்ளதாகவும் புகார்கள் கூறப்பட்டன.



    இந்நிலையில் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் காலை 6 மணி முதல் லஞ்சஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
    கோவை குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு, சென்னை மேற்கு முகப்பேர் 4ஆவது மெயின் ரோட்டில் உள்ள எஸ்.பி.வேலுமணி யின் தொழில் கூட்டாளியான எஸ்.பி.பில்டர் முருகேசன் என்பவர் இல்லத்தில் காலை 6 மணி முதல் லஞ்சஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே எஸ்.பி.வேலுமணி உட்பட 17 பேர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில். எஸ்.பி.வேலுமணி தனது பதவியை தவறாக பயன்படுத்தி முறைகேடாக நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது சகோதரர் மற்றும் உறவினர்களுக்கு அரசு டெண்டர்களை விதிமீறி செயல்படுத்தி உ்ள்ளார். . சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் ரூ.464 கோடி மற்றும் கோவை மாநகராட்சி ஒப்பந்தத்தில் ரூ.346 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: