ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை

முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை

தங்கமணி

தங்கமணி

கடந்தவாரம், முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 69 களில் சோதனை நடைபெற்ற நிலையில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை, நாமக்கல், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்தவாரம், முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 69 இடங்களில் சோதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மீண்டும் நாமக்கல், சேலம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 14 இடங்களில் இந்த சோதனை நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல, சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள, தங்கமணியின் நண்பர் குழந்தைவேலுவின் மகன் மணிகண்டனின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோட்டில், முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 3 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடைபெறுகிறது. அதன்படி, ஈரோடு சாந்தங்காடு பகுதியிலுள்ள தங்கமணி உறவினர் குமார் என்பவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதோ போல, பழையபாளையத்திலுள்ள கடை, ஓண்டிக்காரன் பாளையத்திலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Must Read : இலங்கைப்படையால் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு: மீட்க மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

நாமக்கல் மாவட்டம், பெரிபட்டியில் உள்ள அவரது நண்பர் மோகன் வீடு, ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள நட்சத்திர அப்பார்ட்மெண்ட் மற்றும் மோகனூர் சாலையில் உள்ள ஈஷா அப்பார்ட்மெண்ட்; குமாரபாளையத்தில் தங்கமணியின் நண்பர் மூர்த்தி வீடு, கொல்லிமலையில் உள்ள PST தங்கும் விடுதி, பரமத்தி வேலூர் பொத்தனூர் சண்முகம் வீடு உள்ளிட்ட இடங்களில் ஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: ADMK, Directorate of Vigilance and Anti-Corruption, Salem