• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • CAA-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வரை தமிழகத்தில் போராட்டங்கள் தொடரும் - ஜவாஹிருல்லா

CAA-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வரை தமிழகத்தில் போராட்டங்கள் தொடரும் - ஜவாஹிருல்லா

ஜவாஹிருல்லா - மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்

ஜவாஹிருல்லா - மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்

  • Share this:
    NRC கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வரை குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

    நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்பினர் அரசியல் கட்சியினர் மாணவர்கள் என பலர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இன்று நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியா முழுவதும் என்.ஆர்.சி கணக்கெடுப்பை நடத்துவதற்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் தேவை அவ்வளவு செலவு செய்து என்.ஆர்.சியை மோடி அரசு நடத்தப் போவது இல்லை. என்.பி.ஆர் அடிப்படையிலேயே என்.ஆர்.சி தயாரிக்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெளிவாக கூறியுள்ளது.

    பீகார், கேரளா, புதுச்சேரி அரசுகள் அறிவித்ததை போல தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் என்.ஆர்.சி கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றி அரசிதழில் வெளியிட வேண்டும். அதுவரை குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டங்கள் தொடரும்” என்றார்.

    மேலும் படிக்க: கட்சியில் சசிகலாவுக்கான கதவு முழுவதுமாக சாத்தப்பட்டுள்ளது - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: